ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022 CSK vs DC - எனக்கு கணக்கு வராது, நான் கணக்குப் பாடத்தின் பெரிய ரசிகன் அல்ல - பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து தோனி ஜோக்

IPL 2022 CSK vs DC - எனக்கு கணக்கு வராது, நான் கணக்குப் பாடத்தின் பெரிய ரசிகன் அல்ல - பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து தோனி ஜோக்

பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து தோனி கருத்து.

பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து தோனி கருத்து.

3 போட்டிகளில் வென்று நெட் ரன் ரேட்டுடன் ஒரு நல்ல நிலையில் இருந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி கணக்கீட்டில் சிஎஸ்கே அணிக்கு ஒரு பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உள்ளது, இது குறித்து தோனி கடைசியில் நகைச்சுவையாகப் பேசினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று சிஎஸ்கே 91 ரன்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 208 ரன்களை குவித்து டெல்லியை 117 ரன்களுக்கு சுருட்டியது, பேட்டிங்கில் டெவன் கான்வே வெளுத்துக் கட்ட ஷிவம் துபே, ருதுராஜ், தோனி பங்களிப்பு செய்ய பவுலிங்கில் மொயின் அலி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் இன்னும் 3 போட்டிகளில் வென்று நெட் ரன் ரேட்டுடன் ஒரு நல்ல நிலையில் இருந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி கணக்கீட்டில் சிஎஸ்கே அணிக்கு ஒரு பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உள்ளது, இது குறித்து தோனி கடைசியில் நகைச்சுவையாகப் பேசினார்.

  ஆட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

  ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் கவனம் செலுத்துவதே நல்லது. நான் கணக்குப் பாடத்தின் பெரிய ரசிகன் அல்ல. ஸ்கூல் படிக்கும் போது கூட நான் கணக்கு நன்றாகப் போடுபவன் அல்ல. எப்போதும் நாம் சிறப்பாக ஆட வேண்டும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதே. இன்னொரு டீம் ஜெயித்தால் , அந்த இன்னொரு டீம் இன்னொரு டீமை வெல்ல வேண்டும் என்பதையெல்லாம் யோசிப்பது கூடுதல் அழுத்தத்தையே தரும்.

  நம் ஆட்டத்தை நன்றாகத் திட்டமிட்டு, திட்டத்தை நன்றாகச் செயல்படுத்தி வெற்றி பெறும் வழியைப் பார்க்க வேண்டுமே தவிர எந்த அணி எதனுடன் தோற்றால் நாம் பிளே ஆஃப் செல்லலாம் என்று யோசிப்பது எங்கள் வேலையல்ல. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும். 2 புதிய அணிகள் ஆடும்போது நாம் அழுத்தத்திற்குள் செல்ல கூடாது. ஐபிஎல் போட்டிகளை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள் அதுதான் நல்லது.

  சரி பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அது நடந்து விட்டு போகட்டும். என்னைப் பொறுத்தவரை மீதமுள்ள 3 போட்டிகளில் என்ன செய்ய முடியுமோ அதைச்செய்து வெற்றிபெற வேண்டும். என்னென்ன அணிச்சேர்க்கை சாத்தியம் என்பதைப் பார்க்க வேண்டும். பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால் ரொம்ப நல்லது, இல்லையெனில் அதோடு உலகம் முடிந்து விடப்போவதில்லை.

  இன்று பெரிய ரன் இடைவெளியில் வெற்றி பெற்றது உதவும். இது போன்று முன்னரே வென்றிருக்க வேண்டும். ஆனால் இது துல்லியமான ஒரு போட்டி. நான் டாஸ் வென்று முதலில் பீல்ட் செய்யவே நினைத்தேன், சில வேளைகளில் டாஸ் தோற்பதும் நல்லது. பந்து கொஞ்சம் நின்று வந்தது. எதிரணியின் பெரிய ஹிட்டர்களை அடிக்க விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். முகேஷ் மற்றும் சிமர்ஜித் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு முதிர்ச்சியடைகிறார்கள். சில வீரர்கள் முதல் போட்டியிலேயே முதிர்ச்சி பெறுவார்கள் சிலருக்கு 3-4 போட்டிகள் தேவைப்படும். கேம் சென்ஸ் முக்கியம் எது நல்ல பந்து, எது வீசக்கூடாத பந்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எப்படி வீசக்கூடாது என்பது டி20யில் மிக முக்கியம்.

  என் பேட்டிங்கைப் பொறுத்தவரை முதல் பந்திலிருந்தே அடிப்பது எனக்கு பிடிக்காது. முதல் பந்து என்பது என்ன நடந்து கொண்டிர்க்கிறது என்பதைக் கணிப்பதற்கான விஷயம். 13 அல்லது 14வது ஓவரில் நீங்கள் இறங்கினால் ஒரு ரன்னுக்குத் தட்டி விடலாம், ஆனால் 12 பந்துகள்தான் இருக்கிறது எனும்போது முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும். அந்த சமயத்தில் 2 பந்தில் 4ரன்கள் அடிப்பது நல்ல பேட்டிங் அல்ல.

  இவ்வாறு கூறினார் தோனி.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricket, CSK, IPL 2022, MS Dhoni