ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனி சொன்னார்...நான் செய்தேன் - ஆட்ட நாயகன் டெவன் கான்வே

தோனி சொன்னார்...நான் செய்தேன் - ஆட்ட நாயகன் டெவன் கான்வே

டெவன் கான்வே

டெவன் கான்வே

ஸ்பின்னர்களை அடித்து ஆட உதவியது தோனியின் டிப்ஸ் என்று ஆட்ட நாயகனான டெவன் கான்வே தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சிஎஸ்கே தொடக்க வீரரும் இன்றைய சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய சக்தியுமான டெவன் கான்வே நேற்று 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக சதம் எடுக்காமல் அவுட் ஆனார். நேற்று அக்சர் படேல், குல்தீப் யாதவ் என்ற இரண்டு இடது கை ஸ்பின்னர்களையும் கான்வே உண்டு இல்லை என்று பதம் பார்த்து விட்டார், இதில் அதிக சேதாரம் குல்தீப் யாதவுக்குத்தான். ஸ்பின்னர்களை அடித்து ஆடியதற்கு தோனியின் டிப்ஸ் உதவியது என்றார் டெவன் கான்வே.

  ஐபிஎல் தொடரில் ஆரம்பத்திலிருந்தே கவனித்தோமானால் ஒருவிஷயம் நிரந்தரமாக உள்ளது, இது வேறு அணியின் வேறு கேப்டன்களுக்கு நடப்பதில்லை. சிஎஸ்கேவில் மட்டும்தான், ஏதாவது ஒரு வீரர் ஆட்ட நாயகன் விருது பெற்றாலோ, அல்லது சிறப்பாக ஆடினாலோ, பினிஷிங் செய்து கொடுத்தாலோ உடனே தோனி சொன்னார் என்று கூறுவதைப் பார்க்க முடியும்.

  சிஎஸ்கே அணியில் யார் எது செய்தாலும் அது உடனே தோனியின் ஆலோசனை தோனியின் டிப்ஸ் என்று கூறுவதைப் பார்க்கின்றோம். ஏனெனில் தோனி சிஎஸ்கேவின் பிராண்ட் ஆவார். கிரிக்கெட்டின் மீதான அவரது அலாதியான ஆர்வம் காரணமாக, அனைவரின் பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் கவனம் செலுத்தி சிலபல டிப்ஸ்களையும் ஆலோசனைகளையும் வழங்குபவர் தோனி என்பதில் ஐயமில்லை, இது கேப்டனின் பணி, எல்லா கேப்டன்களும் கிரிக்கெட் ஆரம்பித்தது முதல் இப்படி செயல்படுவதுதான் வழக்கம் மற்றும் கேப்டனின் பணி. மற்ற அணிகளில் கேப்டன்கள் குறித்து இவ்வாறு புகழ்பாடாமல் இருப்பதற்கு அது கேப்டனின் பணி என்பதான பார்வையாகக் கூட இருக்கலாம். அல்லது நிர்பந்தம் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.

  கான்வே கடந்த போட்டியில் ஸ்வீப் செய்ய முயன்று ஆட்டமிழந்தார். 2018-லிருந்து கான்வே ஸ்பின்னுக்கு எதிராக வைத்திருக்கும் ஆவரேஜ் 77.78, ஸ்பின்னுக்கு எதிரான ஸ்ட்ரைக் ரேட் 141.61. என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரம். ஸ்பின்னை வெறுமனே தூக்கி அடிப்பவர் அல்ல கான்வே நளினமாக ஸ்பின்னை ஆடி அலட்சியமாக ரன்களை எடுப்பதிலும் வல்லவர் ரிஸ்க் இல்லாமலேயே ஆடுவதில் வல்லவர். டெவன் கான்வேயின் வளர்ச்சி கட்டம், அவரது ஆரம்பகால பயிற்சி, அவர் வளர்ந்து வந்த விதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, அவரது அசாதாரணத் திறமையை வைத்துப் பார்க்கும்போது ஸ்வீப் ஆடினால் அடுத்து நமக்கு இப்படி வீசுவார்கள் நாம் அதற்கு இப்படி ஆட வேண்டும் என்று தெரியாதவராக இருப்பார் என்று நம்புவதற்கு இடமில்லை. யாராவது சொல்லித்தான் அவர் ஸ்பின் பந்து வீச்சை மேலேறி வந்து அடிக்க முடியும் என்று சொல்வதற்கில்லை.

  இந்நிலையில் டெவன் கான்வே கூறியதாவது:

  இன்று நான் ஆடிய இன்னிங்ஸுக்கு பெருமை சேர்க்க வேண்டுமெனில் அது தோனிக்குத்தான். கடந்த போட்டியில் ஸ்வீப் நிறைய ஆடினேன். அதில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனேன். இதைப் பார்த்துத் தான் தோனி சொன்னார், ‘இன்று உங்களுக்கு ஃபுல் லெந்தில் வீசுவார்கள் என்று நினைக்கிறேன். எனவே மேலேறி நேராக அவர்களை ஆடுவதுதான் பாதுகாப்பு’ என்று கூறினார், வழிகாட்டினார், அதைச் செய்து முடித்தேன். என்றார்.

  கான்வேயின் இந்தக் கருத்து குறித்து எழுதிய கிரிக் இன்போவின் சிதார்த் மோங்கா கடைசியில் ஒரு கேள்வியை எழுப்புகிறார்: ‘மேலேறி வந்து ஆடும் கான்வேவுக்கு எதிராக இப்போது ஸ்பின்னர்கள் வேறு திட்டங்களை வகுத்தால் தோனியின் அனுபவம் கான்வேயிடம் என்ன என்ன கூறும்?’ என்று கேட்கிறார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, IPL 2022, MS Dhoni