Home /News /sports /

IPL 2022 CSK: விசா கிடைப்பதில் பிரச்சனை: மொயீன் அலியும் இல்லையெனில் சிஎஸ்கே என்ன செய்யும்?

IPL 2022 CSK: விசா கிடைப்பதில் பிரச்சனை: மொயீன் அலியும் இல்லையெனில் சிஎஸ்கே என்ன செய்யும்?

மொயின் அலி

மொயின் அலி

ஏற்கெனவே டாடீஸ் ஆர்மி என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்ற அணிகளின் ‘தவறு’களால் பல போட்டிகளை வென்று 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால் இந்த முறை கூடுதலாக 2 அணிகள் சேர்ந்துள்ள நிலையில் வயதான சிஎஸ்கே அணிக்கு இன்னொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது, வீசா தாமதமானதால் மொயின் அலி முதல் போட்டியில் பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...

    மொயின் அலிக்கு விசா இன்னும் கிடைக்காததால், அவர் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை அணியின் முதல் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், “மொயின் அலி இந்தியா வர அனுமதிக்கும் விசா அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் விரைவில் அவருக்கு விசா கிடைக்கும் என நம்புகிறோம்.

    தேவையான அனைத்து ஆவணங்களும் அவரது தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவருக்கு விசா கிடைக்கவில்லை. அவருக்கு விசா கிடைத்ததும் இந்தியாவுக்கு வந்து விடுவார். அதனை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

    ஏற்கெனவே ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வேகமில்லாத வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தினால் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் மொயின் அலி ஓரிரு போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் ‘கிழிஞ்சுது சிஎஸ்கே’ என்று ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

    சிஎஸ்கே அணி: எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயாடு, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கேஎம் ஆசிப், ஷிவம் துபே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், டெவோன் கான்வே, டுவைன் ப்ரிடோரியஸ், ஏடம் பிரிடோரியஸ் சுப்ரான்சு சேனாபதி, பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சௌத்ரி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, IPL 2022, Moeen ali

    அடுத்த செய்தி