IPL 2022 CSK vs RCB அன்று சகவீரர்கள் இன்று வைரிகள்- டுபிளெசிஸ்-தோனி நாளை பலப்பரீட்சை- ஆர்சிபி- சிஎஸ்கே நேருக்கு நேர் சுவாரஸ்ய தகவல்கள்
IPL 2022 CSK vs RCB அன்று சகவீரர்கள் இன்று வைரிகள்- டுபிளெசிஸ்-தோனி நாளை பலப்பரீட்சை- ஆர்சிபி- சிஎஸ்கே நேருக்கு நேர் சுவாரஸ்ய தகவல்கள்
டுபிளெசிஸ் - தோனி மார்ச் 4, ஆர்சிபி-சிஎஸ்கே பலப்பரீட்சை
கிரிக்கெட்டில் இரண்டு பலமான அணிகள் மோதும் போது எப்படி ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்குமோ அதே போல்தான் இரண்டு பலவீனமான அணிகள் மோதும் போதும் ஆட்டம் சுவாரஸ்யமாகவே இருக்கும். அப்படிப்பட்ட போட்டி ஒன்றில்தான் பலவீனமான அணிகளான டுபிளெசிஸ் தலைமை ஆர்சிபியும், தோனி தலைமை சிஎஸ்கேயும் வான்கெடே, மும்பையில் நாளை இரவு 7:30 மணி ஆட்டத்தில் மோதுகின்றன.

ஆர்சிபி இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் 6 அரைசதங்கள் எடுக்கப்பட்டுள்ளன, இதில் டுபிளெசிஸ் 2 அரைசதங்களை எடுத்துள்ளார், ஒரு அணி பலமான பலவீனமான அணியா என்பதற்கான அளவுகோல் இதுதான். அதே போல் சிஎஸ்கே அணியின் பவுலிங்கை எடுத்துக் கொண்டால் எந்த ஒரு பவுலரும் ஓவருக்கு 7.50 என்ற சிக்கன விகிதத்தில் கூட வீசவில்லை இதற்கும் அதிகமாகவே ரன்களைக் கொடுத்துள்ளனர். மஹீஷ் தீக்சனா மட்டுமே 7.54 என்ற சிக்கன விகிதத்தில் வீசியுள்ளார்.
14 விக்கெட்டுகளை வீழ்த்திய டிவைன் பிராவோ ஓவருக்கு 8.73 என்ற வீதத்திலும் முகேஷ் சவுத்ரி 11 விக்கெட்டுகளுக்கு 9.82 என்ற வீதத்திலும் ரன்களை ஒரு ஓவருக்கு விட்டுக் கொடுத்துள்ளனர்.
நிச்சயம் கோலி சென்னையின் பலவீனமான பந்து வீச்சை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வார் இதில்தான் சிஎஸ்கேவுக்குப் பெரிய ஆபத்து உள்ளது, ஆனால் தோனி நிச்சயம் கோலிக்கு எதிராக திட்டம் தீட்டுவார். ஆர்சிபி 10 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது, சிஎஸ்கே நிலை ரொம்ப மோசம், ஆனால் வரும் 5 போட்டிகளில் வென்று பிறகு மற்ற அணிகள் தோற்குமா என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆர்சிபி இந்த ஐபிஎல்-ல் ஒருமுறை 68 ரன்களுக்கு சுருண்டதோடு 145 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் தோல்வியும் தழுவியுள்ளது.
நேருக்கு நேர் மோதலை எடுத்துப் பார்த்தால் மொத்தம் 29 போட்டிகளில் 19-ல் சிஎஸ்கே வென்று ஆர்சிபிக்கு எதிராக கொடி நாட்டியுள்ளது, ஆர்சிபி 9-ல்தான் வென்றுள்ளது, ஆனால் அப்போதெல்லாம் டுபிளெசிஸ் சென்னையில் இருந்தார், இப்போது எதிர்முகாமில் இருக்கிறார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.