அடுத்த 3 ஐபிஎல் தொடர்களுக்கும் தல தோனியை சிஎஸ்கே அணி தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சய் கோயெங்காவின் லக்னோ அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பஞ்சாப் கிங்ஸ் அணி ராகுலை விடுவித்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்றின் பிரத்யேக செய்தி தெரிவிக்கிறது. தோனியுடன் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவையும் சிஎஸ்கே தக்கவைக்கிறது. சிஎஸ்கே அணியின் இப்போதைய ஸ்டார் ருதுராஜ் கெய்க்வாடும் தக்கவைக்கப்படுகிறார்.
பிசிசிஐ விதிகளின்படி ஒவ்வொரு அணியும் 4 வீரர்களைத் தக்கவைக்கலாம். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியுடனும் சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆங்கில ஊடக செய்தி தெரிவிக்கின்றது. அடுத்த ஐபிஎல் இந்தியாவில் நடைபெறும் என்பதால் இங்குள்ள மந்தமான குழிப்பிட்ச்களுக்கு அவர்தான் தோதுபடுவார் என்று தெரிகிறது.
நவம்பர் 30ம் தேதிக்குள் அணிகள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். தோனி என்பது கிரிக்கெட் சம்பந்தப்பட்டது அல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டும், அவர் ஒரு பிராண்ட், அந்த வேல்யூதான் அவருக்கு உள்ளது, எனவே அவர் 10 பந்தில் 0 எடுக்கிறார் 18 பந்துகள் பவுண்டரி அடிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் முணுமுணுக்கக் கூடாது, எல்லாம் கார்ப்பரேட் மயத்தில் தோனி ஒரு பிராண்ட் நேம் அவ்வளவுதான்.
விளம்பரங்களைப் பார்த்து சோப் வாங்குகிறோம், விளம்பரத்தில் எலுமிச்சையின் குணங்கள் என்கின்றனர், கொரோனா வைரஸுக்கு எதிரானது என்கின்றனர். நாம் பயன்படுத்திய பிறகு விளம்பரத்தில் நம்மை ஏமாற்றி விட்டனர் என்று கூற முடியுமா? அதே போல்தான் தோனி ஒரு கிரிக்கெட் வீரர் என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. அவர் ஒரு பிராண்ட்.
தக்கவைக்கப்படும் வீரர்கள் (உத்தேசமாக):
சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி/சாம் கரன்
டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பண்ட், பிரிதிவி ஷா, அக்சர் படேல், ஆன்ரிச் நார்ட்யே.
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, பொலார்டு (பேச்சு வார்த்தையில்), இஷான் கிஷன் (ஒருவேளை ரீடெய்ன் செய்யப்படலாம்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL, IPL Auction, Mahendra singh dhoni, MS Dhoni