எப்போதுமே தான் விலகுவதை ஒரு அதிர்ச்சிகர முடிவாக திடீரென அறிவிக்கும் வழக்கம் கொண்ட தோனி சிஎஸ்கே கேப்டன்சியை நேற்று உதறினார், ரவீந்திர ஜடேஜாவைக் கேப்டனாக்கியுள்ளார். கேப்டனான பிறகு ஜடேஜாவின் முதல் ரியாக்ஷன், எதா இருந்தாலும் தலைவர் இருக்கிறார் என்று தோனியை நம்பி இருப்பதான ஒரு கூற்றை தெரிவித்தார்.
தோனி விலகியதால் இப்போது கேப்டன்சி என்ற சுமை ஜடேஜா கையில் வந்துள்ளது. நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாடீஸ் ஆர்மியை வழிநடத்துகிறார் ஜடேஜா. ஜடேஜா என்ன கூறுகிறார் என்பதன் வீடியோவை சிஎஸ்கே பகிர்ந்துள்ளது:
இந்நிலையில் தன்னிடம் கேப்டன்சி வழங்கப்பட்டது குறித்து ஜடேஜா கூறும்போது, “நன்றாக உணர்கிறேன். ஆனால் தோனி போன்ற ஆளுமையின் இடத்தை நிரப்புவது அவ்வளவு சுலபமல்ல. மாஹி ஏற்கெனவே பெரிய பாரம்பரியம் ஒன்றை உருவாக்கி வைத்துவிட்டார். அதை நீட்டிக்க வேண்டும், நான் அதைச் செய்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது.
நான் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை ஏனெனில் தோனிதான் இருக்கிறாரே, இங்குதான் இருக்கிறார். எனவே என்ன சந்தேகம் இருந்தாலும் அவரைக் கேட்பேன். ஏதாக இருந்தாலும் தோனி ஒருவரிடம் தான் கேட்பேன், இப்போது மட்டும் விதிவிலக்கா என்ன? இப்போதுதான் இன்னும் அதிகம் ஆலோசனை கேட்பேன், ஆகவே நான் கவலைப்படவில்லை.
தோனியின் கேப்டன்சியில் 204 போட்டிகளில் 121 போட்டிகளில் சிஎஸ்கே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.