சிஎஸ்கே அணி தோனி, ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரைத் தக்க வைத்துள்ள நிலையில் சிஎஸ்கேவுக்காகவே உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த அம்பதி ராயுடுவையும் ஏலத்தில் எடுக்கலாம் என்று தெரிகிறது.
அதே போல் தோனியின் நீண்ட கால நண்பரும் கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் கொடுத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய ராபின் உத்தப்பாவையும் ஏலத்தில் எடுக்கலாம் என்று தெரிகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி கடந்த முறை அடைந்த பின்னடைவுகளுக்கு ஈடு கட்டும் விதமாக கோப்பையை 4வது முறையாக வென்று அசத்தியது.
இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி மாதம் 2022ம் ஆண்டு நடைபெறுவதை அடுத்து சிஎஸ்கே அணி தோனி படை எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஒரு புறம் அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா என்று சீனியர்களுக்கு வலை வீசினாலும் தமிழ்நாடு அணியில் கலக்கு கலக்கென்று கலக்கி வரும் அதிரடி மன்னன் ஷாருக்கானை சிஎஸ்கே அணி போட்டிப் போட்டு ஏலத்தில் எடுக்குமென்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காத சிஎஸ்கே அந்த விமர்சனங்களுக்கு பதில் தரும் வண்ணமாக ஷாரூக்கானை ஏலம் எடுக்கலாம் என்று தெரிகிறது.
டாடீஸ் ஆர்மி என்று கேலி செய்யப்பட்ட சிஎஸ்கே இந்த முறை அனுபவமும், இளமையும் கலந்த அணியாக இருக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் அம்பதி ராயுடு, சிஎஸ்கே வாய்ப்பு பற்றி கூறுகையில், “நான் நல்ல பிட் ஆகவும் பார்மில் இருக்கும் வரையில் ஆடலாம் என்றுதான் பார்க்கிறேன். அடுத்த சுழற்சிக்குத் தயார். அதாவது 3 ஆண்டுகள் ஆடலாம் என்று கருதி உடல்தகுதியில் தீவிரமாக தயாராகி வருகிறேன்.
2019 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாதது கடும் ஏமாற்றமே.நான் மீண்டும் வந்த பெருமை சிஎஸ்கேவுக்கே சேரும். அந்தக் காலக்கட்டத்தை கடக்க சிஎஸ்கே தான் எனக்கு உதவியது அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தோனி என்னிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொணர்வதில் சிறந்த கேப்டன். நான் மட்டுமல்ல அனைவரிடமும் அவர் திறமைகளை வெளிக்கொண்டு வருவார். அதனால் தான் அவர் இந்தியாவின் சிறந்த கேப்டன்.
Also Read: கோலி மாதிரியே தேவையில்லாத ஷாட் ஆடி 7 விக்கெட்டுகளும் அவுட்
நிச்சயம் சிஎஸ்கேவுக்கு ஆடவிரும்புகிறேன். ஆனால் இதுவரை ஒரு கம்யூனிகேஷனும் இல்லை. மீண்டும் என்னை தேர்வு செய்வார்கள் என்றே கருதுகிறேன். நிச்சயம் இன்னொரு நல்ல லீகாக அது அமையும்” என்றார் அம்பதி ராயுடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambati rayudu, CSK, IPL 2022