Home /News /sports /

தோனி கேப்டனா இருந்தா ஜெயிச்சிருப்பாரா?- இப்பவும் அவர்தான் கேப்டன் - முன்னாள் வீரர் திட்டவட்டம்

தோனி கேப்டனா இருந்தா ஜெயிச்சிருப்பாரா?- இப்பவும் அவர்தான் கேப்டன் - முன்னாள் வீரர் திட்டவட்டம்

தோனி.

தோனி.

சிஎஸ்கே அணி கேப்டனை மாற்றியுள்ளது, டுபிளெசிஸ் இல்லை, ஹேசில்வுட் இல்லை, பவுலிங் படுமட்டம், ருதுரா பார்மில் இல்லை, தோனி பார்மில் இருப்பது சென்னைக்குத்தான் டேஞ்சர். இப்படியாக சிஎஸ்கே அணியின் பலவீனங்களை பலரும் அடுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஜடேஜா கேப்டன்சியில்தான் கோளாறு என்று பலரும் பேசி வருவதை முன்னாள் இந்திய வீரர் மொகமட் கைஃப் மறுத்துள்ளார். தோனிதான் இப்போதும் கேப்டன், ஜடேஜா முடிவுகளை எடுப்பதில்லை என்கிறார் திட்டவட்டமாக.

மேலும் படிக்கவும் ...

    இந்த வார தொடக்கத்தில் சென்னைக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 211 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்வதற்கு முன்பு, கடந்த வாரம் சீசன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் சிஎஸ்கே தோல்வியடைந்தது. நேற்று சிஎஸ்கேயை பஞ்சாப் கிங்ஸ் பந்தாடியது. பிரபோர்ன் ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான சிஎஸ்கேயின் போட்டிக்கு முன்னதாக ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் பேசிய கைஃப், எல்எஸ்ஜிக்கு எதிரான ஆட்டத்தில், 19வது ஓவரில் பகுதி நேர வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் துபேவுக்கு பதிலாக, எவின் லூயிஸுக்கு எதிராக மொயின் அலியுடன் ஜடேஜா சென்றிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விண்டீஸ் பேட்டர் பலவீனமானவர் என்றார் கைஃப்.

    கைஃப் கூறியதாவது: “எவின் லூயிஸ் ஸ்பின் நன்றாக விளையாடவில்லை. இதனால்தான் மும்பை அவரை விட்டு விட்டது. உங்களிடம் மொயீன் அலியின் மூன்று ஓவர்கள் மீதமுள்ளன, ஆனால் நீங்கள் இன்னும் அவரைப் பயன்படுத்தவில்லை. லூயிஸ் சுழற்பந்து வீச்சை சரியாக விளையாடுவதில்லை. அவர் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களை சிக்ஸருக்கு அடித்து நொறுக்குவார். மொயீன் அலிக்கு பந்து கொடுக்காதது தவறு, இது ஜடேஜாவின் முடிவு அல்ல, அவர் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார். இப்போதும், எம்எஸ் தோனி தான் முடிவுகளை எடுக்கிறார்.

    இரண்டு தோல்விகள் இருந்தாலும் சிஎஸ்கேவின் டிரஸ்ஸிங் ரூம் சூழல் அமைதியாகவே இருக்கும். தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும், அவர் மட்டுமே முன்னணி கதாபாத்திரத்தில் கேப்டன்சியை எடுத்தாள்கிறார். கடைசி ஆட்டத்தில் அவர் ஜடேஜாவுக்கு நிறைய கற்றுக் கொடுத்தார், அவர்கள் தோற்றாலும், தோனியின் அமைதியான செல்வாக்கு இருக்கும். சிஎஸ்கே பவுலிங் கண்டபடி மேம்பட வேண்டும் இல்லையெனில் கஷ்டம்தான்” என்கிறார் கைஃப்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, IPL 2022, MS Dhoni

    அடுத்த செய்தி