Home /News /sports /

IPL 2022: எம்.எஸ்.தோனியின் அசத்தல் கேப்டன்சி - ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ தருணங்கள்

IPL 2022: எம்.எஸ்.தோனியின் அசத்தல் கேப்டன்சி - ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ தருணங்கள்

கிறிஸ் கெய்ல் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் தோனி.

கிறிஸ் கெய்ல் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் தோனி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கேப்டன் நாயகன் என்றால் அது தோனிதான், டி20 கிரிக்கெட்டின் உள்ளும்புறமும் அனைத்தும் அறிந்தவர் தோனி, அவர் சில போட்டிகளை தன் சாதுரியமான கேப்டன்சி மூலமும் நுட்பமான களவியூகம் மூலமும் பந்து வீச்சு மாற்றத்தின் மூலமும் வெற்றி பெறச் செய்துள்ளார். அத்தகைய சில தருணங்கள் இதோ:

மேலும் படிக்கவும் ...
  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கேப்டன் நாயகன் என்றால் அது தோனிதான், டி20 கிரிக்கெட்டின் உள்ளும்புறமும் அனைத்தும் அறிந்தவர் தோனி, அவர் சில போட்டிகளை தன் சாதுரியமான கேப்டன்சி மூலமும் நுட்பமான களவியூகம் மூலமும் பந்து வீச்சு மாற்றத்தின் மூலமும் வெற்றி பெறச் செய்துள்ளார். அத்தகைய சில தருணங்கள் இதோ:

  2010 ஐபில் - சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பைனல்

  2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 136/6 என்று 2 ஓவர்களில் 33 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் இருந்தது, போலார்ட் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். டக்கி போலிங்கரை ஒரே ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 22 ரன்கள் வெளுத்திருந்தார். அப்போதுதான் தோனியின் மூளை வேலை செய்தது, ஏனெனில் பொலார்டு நின்றால் மும்பை வென்று விடும்.

  மேத்யூ ஹெய்டனை வழக்கமற்ற முறையில் நேருக்கும் மிட் ஆஃபுக்கும் இடையில் ஒரு பொசிஷனில் நிறுத்தினார், லாங் ஆஃபும் இருந்தது. போலார்டு நேராக பவுண்டரி அடிப்பதில் வல்லவர், அந்தச் சமயத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஆல்பி மோர்கெலை தோனி யார்க்கர்களாக வீசச் சொன்னார். ஆனால் முதல் பந்தை மோர்கெல் பவுண்டரி அடித்தார். அப்போது தொடர்ந்து யார்க்கர்களாக மோர்கெல் வீச போலார்ட் அதைக் கிண்டி ஹெய்டனிடம் கேட்ச் கொடுத்தார். பொலார்ட் போனவுடன் சிஎஸ்கே தன் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது.

  ஐபிஎல் 2018: சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ்

  சிஎஸ்கேவுக்கு இலக்கு 154 ரன்கள், ஆனால் 27/3 என்று சரிவு கண்டது தோனி படை. வேகப்பந்து வீச்சாளர் அங்கிட் ராஜ்புத் ஹாட்ரிக் எடுக்கும் நிலையில் இருந்தார். அப்போது தோனி களமிறங்காமல், ஹர்பஜன் சிங் மற்றும் தீபக் சாஹரை தனக்கு முன்னால் இறக்கி விட்டார். அதாவது பிராவோ இருக்கிறார், ஜடேஜா இருக்கிறார் ஆனால் ஹர்பஜன் தீபக் சாஹரை இறக்கினார் துணிச்சலாக. ஹர்பஜன் 22பந்துகளில் 19 ரன்களை எடுக்க தீபக் சாஹர் 20 பந்தில் 39 ரன்களை வெளுத்து வாங்கினார். இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்.

  ஐபிஎல் 2010 சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பைனல்

  டக்கி போலிங்கர் முதலில் ஷிகர் தவானை அவுட் ஆக்கியிருந்தார். 169 ரன்கள் இலக்கை விரட்டலில் சச்சின் டெண்டுல்கர் மும்பையை நிலை நிறுத்தினார். மைதானமே சச்சின், சச்சின் என்று அலறிக் கொண்டிருக்கும் நிலையில் இடது கை ஸ்பின்னர் ஜகதியைக் கொண்டு வந்தார் தோனி. ஆனால் அபிஷேக் நாயர் அவரை 2 சிக்சர்களை அடுத்தடுத்து அடித்தார். ஆனால் முனையை மாற்றி கொடுத்தவுடன் சச்சின் விக்கெட்டை ஜகதி வீழ்த்தினார். இதே போல் 2012 எலிமினேட்டர் சுற்றில் இதே ஜகதியிடம் பந்தைக் கொடுக்க சச்சினால் 11 பந்தில் 11 ரன்களையே எடுக்க முடிந்தது.

  ஐபிஎல் 2028- சன் ரைசர்ஸ்- சிஎஸ்கே

  2018-ல்தான் காவேரி நதிநீர் பிரச்சனை ஏற்பட்டதால் சென்னையில் ஒரு போட்டியை நடத்திய பிறகு ஆட்டம் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஹர்பஜன் சென்னை குழிப்பிட்சில் உதவுவார் என்றுதான் எடுத்தனர். அன்று ஜடேஜாவை பயன்படுத்தி ஹர்பஜனைப் பயன்படுத்தவில்லை. ஜடேஜா 4 ஓவர் 13 ரன்களையே விட்டுக் கொடுத்தார். ஹர்பஜன் சிங்கைப் பயன்படுத்தாது பற்றி தோனி கூறும்போது, “என் கேரேஜில் நிறைய கார்கள், பைக்குகள் உள்ளன, ஆனால் அனைத்தையும் நான் ஒரே சமயத்தில் ஓட்ட முடியுமா?” என்றார்.

  இதே போல் அதே ஆண்டில் பைனலில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஹர்பஜனை ட்ராப் செய்து விட்டு கரண் ஷர்மாவை எடுத்தார், அவரும் கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.

  கிறிஸ் கெய்லை கட்டுப்படுத்தியது..

  சிஎஸ்கே, ஆர்சிபி மேட்ச். 2011 ஐபிஎல் பைனல். சிஎஸ்கே 205/5 என்று வெளுத்துக் கட்டியது, முரளி விஜய் 95 ரன்கள் விளாசினார், இந்த இலக்கை விரட்ட வேண்டுமெனில் ஆர்சிபியில் கிறிஸ் கெய்ல் வெளுத்து வாங்க வேண்டும். ஆனால் அஸ்வினைக் கொண்டு வந்தார் தோனி, கிறிஸ் கெய்ல் 3 பந்து ஆடி டக் அவுட் ஆனார். தோனிதான் கேட்ச் எடுத்தார். அபாரமான பந்து, தோனியின் அபாரமான மூளை, அந்தப் போட்டியில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார். கேம் ஓவர். கோலியையும் மடக்கினார் தோனி.

  இன்னும் பல சாதுரியமான தோனி கேப்டன்சி தருணங்கள் உண்டு. சக்சஸ் ஆனதும் உண்டு, தோல்வியடைந்ததும் உண்டு.
  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, IPL 2022, MS Dhoni

  அடுத்த செய்தி