ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் தோனி, 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காகத்தான் ஆடினார். சூதாட்டப்புகார் காரணமாக அந்த 2 சீசன்களிலும் சிஎஸ்கே அணி தடைபெற்றிருந்தது ஆனால் தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை என்ற நிலையில் ஜடேஜாவிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்டதையடுத்து இதுதான் தோனியின் கடைசி சீசன் என்கின்றனர்.
ஆனால் அவர் இந்த ஆண்டு சென்னையில் போட்டிகள் நடைபெறாது எனும்போது, தான் சென்னையில் தான் ஓய்வு பெறுவேன் என்று அறிவித்ததையும் கவனிக்க வேண்டியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் நிலையில், ஐபிஎல்லிலும் அவரது கெரியரின் முடிவில் உள்ளார். 15வது சீசனின் மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணியை ஜடேஜாவை முதல் வீரராக தக்கவைக்க சொல்லிவிட்டு, தன்னை 2வது வீரராகவே தக்கவைக்க சொன்னார் தோனி. அதன்படி, தோனியைவிட அதிகமான தொகைக்கு ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.
எனவே இதுவே தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். அதைத்தான் ஆகாஷ் சோப்ராவும் தெரிவித்துள்ளார், “இந்த ஆண்டின் தொடக்கத்திலும், அவர் அடுத்த சீசனில் இல்லாததால், அவரைத் தக்கவைத்துக்கொள்வதற்கு பணத்தைச் செலவழித்தால் அணியை வலிமையாக்கியிருக்காது என்பதால், அவரைத் தக்கவைக்க தோனி விரும்பவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனால்தான் ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாய் வழங்கப்படாவிட்டால், ஜடேஜாவைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்று தோனி கூறினார்.
எம்.எஸ். தோனி கேப்டனாக இல்லாதபோது, அவர் இன்னொரு கேப்டனின் முடிவுகளில் தலையிட மாட்டார். தேவைப்படும்போது அல்லது நீங்கள் அவரிடம் சென்றால் மட்டுமே பேசுவார். அவர் உங்களிடம் வந்து வலிய தனது கருத்துக்களை திணிப்பவர் அல்ல. அவர் ஓரங்கட்டப்படுவதையே விரும்புகிறார். யாராவது அவரிடம் ஆலோசனை கேட்கும் வரை அவராகவே வந்து ஆலோசனை வழங்க மாட்டார்” என்றார் ஆகாஷ் சோப்ரா
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.