ஐபிஎல் 2022- தன்னை வெளிநாட்டு வீரர் என்ற பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த ஷெல்டன் ஜாக்சன்
ஐபிஎல் 2022- தன்னை வெளிநாட்டு வீரர் என்ற பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த ஷெல்டன் ஜாக்சன்
ஷெல்டன் ஜாக்சன்
குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷெல்டன் ஜாக்சன். இவர் முதல் தர போட்டிகளில் சௌராஷ்டிரா அணிக்காக ஆடி வருகிறார். இதுவரை 79 போட்டிகளில் 5,947 ரன்களை குவித்துள்ளார். இவரை தொலைக்காட்சி விவாதத்தில் வெளிநாட்டு வீரர் என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வர்ணித்ததற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷெல்டன் ஜாக்சன். இவர் முதல் தர போட்டிகளில் சௌராஷ்டிரா அணிக்காக ஆடி வருகிறார். இதுவரை 79 போட்டிகளில் 5,947 ரன்களை குவித்துள்ளார். இவரை தொலைக்காட்சி விவாதத்தில் வெளிநாட்டு வீரர் என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வர்ணித்ததற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர்களின் ஆழ்ந்த மற்றும் தீவிரமான விவாதங்களுக்கு நடுவில், 35 வயதான துடுப்பாட்ட வீரர் ஷெல்டன் ஜாக்சனின் தலைவிதியைப் பற்றியும், அணிக்குள் இருக்கும் விக்கெட் கீப்பர் பேட்டரை KKR எவ்வாறு பொருத்துவது என்றும் விவாதிக்கத் தொடங்கினர், குறிப்பாக சாம் பில்லிங்ஸ் போன்ற வேறு சில பெரிய வெளிநாட்டுப் பெயர்கள் இருக்கும்போது. மற்றும் ஆரோன் பின்ச் அணியில் உள்ள போது ஷெல்டன் ஜாக்சன் என்ற வெளிநாட்டு வீரரை எப்படி பொருத்த முடியும் என்றார்.
இருப்பினும், அவரது விவாதத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஜாக்சன் சௌராஷ்டிராவுக்காக இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுகிறார், நாட்டின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மற்றும் ஒரு வீரராக அதிகம் பேசப்படுகிறார், குறிப்பாக கடந்த 4-5 ஆண்டுகளாக ஐபிஎல் சுற்றில். ஆனால் மிக முக்கியமாக, ஷெல்டன் ஜாக்சன் குஜராத்தின் பாவ்நகரைச் சேர்ந்த அவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர்!
இவர் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட இருக்கிறார். நாளை மறுநாள் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் இந்த போட்டி தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஷெல்டன் ஜாக்சனை அயல்நாட்டு வீரர்கள் பட்டியலில் தொடர்ச்சியாக 3 முறை கூறினார்.
This is height of comedy! The so called cricket experts on #SportsTak are continuously calling Sheldon Jackson a foreign player. Shame! pic.twitter.com/aNTPEbh3xX
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பத்திரிக்கையாளருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்ட போதும் ரசிகர்கள் அந்த பத்திரிகையாளரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இதற்கு ஷெல்டன் ஜாக்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஊரான சௌராஷ்டிராவின் வரைபடத்தை பகிர்ந்துள்ளார்.
சௌராஷ்டிரா இந்தியாவில் தான் உள்ளது என்பதை அந்த பத்திரிகையாளருக்கு நினைவுப்படுத்துவதற்கே ஷெல்டன் ஜாக்சன் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.