ஐ.பி.எல் 2022 தொடரின் 46-வது போட்டியில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், கான்வே களமிறங்கினர். இருவரும் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் ஹைதராத் அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர்.
சிறப்பாக ஆடிய ரூத்ராஜ் 57 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழத்தினார்.
அதனையடுத்து, களமிறங்கிய ஹைதாராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, வில்லியம்சன் களமிறங்கினர். அபிஷேக் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்சனும் ஆட்டமிழந்தார்.
மீண்டும் மகுடம் சூடும் தோனி.. சிஎஸ்கேவை தோல்வியில் இருந்து மிட்டெடுப்பாரா?
அதனையடுத்து, களமிறங்கிய ராகுல் திரிபாதி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐந்தாவதாக களமிறங்கிய பூரன் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய பூரன் 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும், ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.