முகப்பு /செய்தி /விளையாட்டு / இறுதி ஓவரில் மாஸ் காட்டிய தோனி: மும்பையை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி

இறுதி ஓவரில் மாஸ் காட்டிய தோனி: மும்பையை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி

தோனி

தோனி

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

  • Last Updated :

ஐ.பி.எல் 2022 தொடரின் 33-வது போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கும் ரோஹித்தும், இஷானும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அது இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது.

ரோஹித்தும், இஷானும் ரன் ஏதும் எடுக்காமல் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டீவல்டு பீரிவிஸும் 4 ரன்களில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. அதனையடுத்து, சூர்யா குமார் 32 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மா மட்டும் நிதானமாக ஆடி 51 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் முகேஷ் 3 விக்கெட்டுகளையும் ப்ராவோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா களமிறங்கினர். ரூத்ராஜ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களிமறங்கிய மிட்செல் சான்ட்நரும் 11 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சென்னை அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து, ஜோடி சேர்ந்த உத்தப்பா, ராயுடு இணை நிதானமாக ஆடி ரன்கள் எடுத்தது. உத்தப்பா 30 ரன்கள் எடுத்த நிலையில் உனத்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஷிவம் துபேவும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய ராயுடு 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இறுதி ஓவரை உனத்கட் வீசினார். அப்போது, ஸ்ரைக்கில் ட்வைன் பிரிட்டோரியஸ் இருந்தார். நான் ஸ்ட்ரைக்கில் தோனி இருந்தார். முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழக்க மேட்ச் மும்பை அணிக்கு சாதகமாக இருந்தது. அதனையடுத்து, களமிறங்கிய ப்ராவோ இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுக்க தோனி ஸ்டிரைக்கு வந்தார். 4 பந்தில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. 3-வது பந்தில் சிக்ஸ் அடித்து பரபரப்பைக் கூட்டினார் தோனி.

பேட்டிங்கில் தடுமாறிய மும்பை வீரர்கள்: சென்னை அணிக்கு 156 ரன்கள் இலக்கு

உனத்கட் வீசிய நான்காவது பந்து பவுன்சராக வந்தநிலையில் அதனை பின் பகுதியில் லாவகமாக அடித்து பவுண்டரி அடித்தார். இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் 5 பந்தில் இரண்டு ரன் எடுத்தார் தோனி. இறுதி பந்தில் நான்கு ரன் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார் தோனி. அதன்மூலம் சென்னை அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஏழாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

First published:

Tags: IPL 2022