Home /News /sports /

கான்வே அதிரடி- 208 ரன்கள் குவித்த சென்னை அணி

கான்வே அதிரடி- 208 ரன்கள் குவித்த சென்னை அணி

சென்னை வீரர்கள்

சென்னை வீரர்கள்

டெல்லி அணிக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி.

    டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 55-வது போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர்.

    ஒருபுறம் கான்வே அதிரடியாக ஆட மறுபுறம் ரூத்ராஜ் நிதானமாக ஆடினார். 11 ஓவரில் சென்னை அணி 110 ரன்கள் எடுத்திருந்த முதல் விக்கெட் இழந்தது. ரூத்ராஜ் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நார்ட்ஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிய கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துபே ஆட்டமிழந்தார். ஐந்தாவதாக இறங்கிய தோனி 8 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் எடுத்தார். அதன்மூலம் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணி சார்பில் நார்ட்ஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: CSK, IPL 2022

    அடுத்த செய்தி