Home /News /sports /

ரூத்ராஜ் அதிரடி: இறுதி ஓவர்களில் ரன்கள் சேர்க்க தடுமாறிய வீரர்கள்- 169 ரன்கள் எடுத்த சென்னை அணி

ரூத்ராஜ் அதிரடி: இறுதி ஓவர்களில் ரன்கள் சேர்க்க தடுமாறிய வீரர்கள்- 169 ரன்கள் எடுத்த சென்னை அணி

ரூத்ராஜ், ராயுடு

ரூத்ராஜ், ராயுடு

குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 29-வது போட்டியில் சென்னை அணியும், குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா களமிறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய உத்தப்பா இந்தப் போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து, ரூத்ராஜ், அம்பதி ராயுடு இணை ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 32 ரன்களில் 2 விக்கெட்களை இழந்த நிலையில், இந்த இணை 92 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ராயுடு 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ரூத்ராஜ் 48 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ஷிவம் துபே, ஜடேஜா இணை அதிரடியாக ரன்களைக் குவிக்க சிரமப்பட்டனர். 17 பந்துகளை எதிர்கொண்ட துபே 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். மறுபுறம் ஜடேஜா 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள் அடித்தார். இறுதி ஓவர்களில் அதிரடியாக ரன்கள் சேர்க்க வீரர்கள் தடுமாறியதால் ரன்ரேட் வெகுவாகக் குறைந்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 169 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் அணி சார்பில் அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: CSK, IPL 2022

    அடுத்த செய்தி