முகப்பு /செய்தி /விளையாட்டு / பேட்டிங்கில் மிரட்டல்: பந்துவீச்சில் அசத்தல்- முதல் வெற்றியைப் பதிவு செய்த சென்னை அணி

பேட்டிங்கில் மிரட்டல்: பந்துவீச்சில் அசத்தல்- முதல் வெற்றியைப் பதிவு செய்த சென்னை அணி

சென்னை வீரர்கள்

சென்னை வீரர்கள்

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

  • Last Updated :

ஐ.பி.எல் 2022 தொடரின் 22-வது போட்டியில் பெங்களூரு அணியும், சென்னை அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா களமிறங்கினர். கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூத்ராஜ் இந்தத் தொடரில் தடுமாறிவருகிறார். அது இந்தப் போட்டியிலும் அவர் ஆட்டம் மோசமாக அமைந்தது. 16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார். 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 6.4 ஓவரில் வெறும் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா, ஷிவம் துபே இணை பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். இந்தத் தொடர் இதுவரையில் பார்க்காத ஆட்டத்தை துபேவும் உத்தப்பாவும் கொடுத்தனர். இருவரும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

சிறப்பாக ஆடிய ராபின் உத்தப்பா 18.5 ஓவரில் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, களமிறங்கிய ஜடேஜா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மறுபுறம் ஷிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திவந்தார். இறுதி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் துபே சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. அப்போது, ஸ்டிரைக்கில் இருந்தார் துபே. முதல் பந்திலேயே துபே சிக்ஸ் அடித்து அசத்தினார். அதனை இரண்டு பந்துகளைத் தவறவிட்ட அவர் அடுத்த பந்தில் சிக்ஸ் அடித்தார். 5-வது பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார் துபே. அதன்மூலம் 94 ரன்களை எட்டினார் துபே.

இறுதி பந்தில் சிக்ஸ் அடித்தால் சதம் எட்டலாம் என்ற நிலையில் ஒரு ரன்களை மட்டுமே ஷிவம் எடுத்தார். அதன்மூலம் 46 பந்துகளில் 95 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் துபே. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 216 ரன்களைக் குவித்தது.

அதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக டூப்ளஸிஸ், அனுஜ் ராவத் களமிறங்கினர். டூப்ளஸிஸ் 8 ரன்களிலும், கோலி 1 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து ராவத்தும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காவது வீரராக களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

உத்தப்பா, ஷிவம் துபே அதிரடி - 216 ரன்கள் குவித்த சென்னை அணி

7 ஓவரில் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது. அதனையடுத்த ஷாபஸ் அகமது, சுயாஸ் பிரபுதேசாய் இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. பிரபுதேசாய் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய ஷாபாஸ் அகமது 27 பந்துகளில் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆறாவது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

14 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் ப்ராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது. அதன் மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

First published:

Tags: CSK, IPL 2022