IPL 2022 CSK vs RR- ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இடைமறிக்குமா சிஎஸ்கே-பேபி மலிங்கா மதீஷ் பதிரனா அதிர்ச்சியளிப்பார்?
IPL 2022 CSK vs RR- ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இடைமறிக்குமா சிஎஸ்கே-பேபி மலிங்கா மதீஷ் பதிரனா அதிர்ச்சியளிப்பார்?
ராஜஸ்தான் ராயல்ஸ் - சிஎஸ்கே மேட்ச்
இன்று பிரபர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2022-ன் 68வது போட்டியில் 16 புள்ளிகளுடன் அட்டவணையில் 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வெளியேறிய சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சமன்பாடு மிகவும் எளிதானது, சிஎஸ்கேவை வீழ்த்தி 3வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டியதுதான்.
இன்று பிரபர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2022-ன் 68வது போட்டியில் 16 புள்ளிகளுடன் அட்டவணையில் 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வெளியேறிய சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சமன்பாடு மிகவும் எளிதானது, சிஎஸ்கேவை வீழ்த்தி 2-வது அல்லது 3வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டியதுதான்.
அப்படித் தோற்றாலும் சிறிய ரன் இடைவெளியில் தோற்றால் 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரிய தோல்வி அடைந்து, டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்று விட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் நிச்சயம் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இதற்கான சாத்தியம் குறைவு, ஆனால் சாத்தியமில்லை என்று கூற முடியாது.
ஷிம்ரன் ஹெட்மையர் ராஜஸ்தான் அணிக்குத் திரும்பியுள்ளார், பட்லர் கடந்த சில போட்டிகளாக அமைதியாக இருக்கிறார், அன்று டி காக் சமயத்துக்கு எழுச்சி பெற்று 70 பந்தில் 140 என்று மகா அதிரடியில் லக்னோவை தகுதி பெறச் செய்தார், அதே போன்று பட்லர் செய்தால் அது நிச்சயம் பேசப்படும். ஷிம்ரன் ஹெட்மையர் கடைசி 5 ஓவர்களில் இறங்கி 19 சிக்சர்களை இதுவரை அடித்துள்ளார், இது அதிகம். ராயல்ஸ் பேட்டிங் வலுவாக உள்ளது, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், படிக்கல் இப்போது நன்றாக ஆடுகின்றனர்.
பவுலிங் கேட்கவே வேண்டாம், போல்ட், பிரசித் கிருஷ்ணா, செஹல், அஸ்வின் என்று வலுவாக உள்ளது.
சூப்பர் கிங்ஸ் அணி தன் கடைசி 2 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளது, இதனால் ராஜஸ்தான் கை ஓங்கியுள்ளது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 133/5 என்று குஜராத்திற்கு எதிராக மடிந்தது. முகேஷ் சவுத்ரி மட்டுமே பவுலிங்கில் தேறுகிறார், பவர் ப்ளேயில் அவர் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பிறகு பேபி மலிங்கா மாதீஷ் பதிரனா இருக்கிறார்.
பிறகு வழக்கம் போல் ஒரு கேள்வி மீதமுள்ளது, இது கடந்த சில ஐபிஎல் தொடர்களிலும் உள்ள கேள்விதான் தோனி அடுத்த தொடரில் ஆடுவாரா, இல்லை மெண்டாரா, என்று “மயிலுக்கு வான்கோழி, புலிக்குப் பூனை, குதிரைக்குக் கழுதை, குயிலுக்குக் காக்கை கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்” என்று மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன் எழுதியது போல் ‘நம் ஊடகங்களுக்கு எந்நாளும் தோனி’ என்பதற்கேற்ப அவரைச் சுற்றியே கேள்விகள் மையம் கொள்ளும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.