ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் சென்னை அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும். சென்னை மோதப்போகும் அணி எது? இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம், அணியின் ஆடும் லெவன் உள்ளிட்டவற்றை அலசுவோம்.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் விறுவிறுப்பின் உச்சம் தொடுகின்றன. களத்தில் இறுதி நிமிடம் வரை வீரர்கள் வெற்றிக்காக போராடுவது ரசிகர்களை ஆட்டம்போடவைக்கிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 38 வது லீக் போட்டியை கொண்டாட மஞ்சள் தமிழர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறனர்.இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பாண்டில் இரு அணிகளும் இரண்டாவது முறையாக நேருக்கு நேர் மோதுவுள்ளனர். முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இன்றைய போட்டியில் இதற்கு சென்னை அணி பதிலடி கொடுக்கும் என எல்லோ ஆர்மி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றது. பிளே ஆஃப் சுற்றிலிருந்து மும்பை அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நிலையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள அணிகள் என்ற முறையில் கட்டாயவெற்றியை நோக்கி இரு அணிகளும் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.
Also Read: பந்துவீச்சில் அசத்திய லக்னோ: பேட்டிங்கில் சொதப்பிய மும்பை- 8-வது போட்டியாக தொடர் தோல்வி
சென்னை அணி ஏழு போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி கண்டு இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது. இதற்கு உயிர்கொடுக்க வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் சென்னை அணி வென்றால் மட்டுமே சாத்தியமாகும். பந்துவீச்சை பொருத்தவரை தீபக் சஹர் இனிவரமாட்டார் என தெரிந்தவுடன் பந்துவீச்சாளர்கள் சற்று பொறுப்புடன் செயல்படுகின்றனர். முகேஷ் சௌத்ரி பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையை அடையாளம் கண்டுள்ளார். டெத் ஓவரில் ரன்களை கடுப்படுத்துவதுடன் விக்கெட்டுகளை வீழ்த்தும் வித்தையை பிராவோ கச்சிதமாக நிறைவேற்றுகிறார். இலங்கை வீரர் தீக்சனாவின் சுழலில் எதிரணியினர் திண்டாடுகின்றனர்.
பேட்டிங்கில் சென்னை அணி இன்னும் சுதாரிக்க வேண்டியது அவசியமாகிறது. தரமான ஓப்பனர்கள் இல்லாமல் சென்னை அணி திண்டாடுகிறது. ருத்துராஜ் ஸ்பார்க் இல்லாமல் சொதப்புகிறார். உத்தப்பா ஓரிரு போட்டிகளில் கைகொடுத்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார். இவர்கள் இருவரும் பஞ்சாப் அணியுடனான முதல் மோதலில் சொதப்பியதே சேசிங்கில் ரன் எண்ணிக்கை உயராததற்கு காரணமாக அமைந்தது. இதிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.
Also Read: விதிமுறை மீறி மோசமானசெயல்பாடு.. ரிஷப் பந்திற்கு ரூ.1.15 கோடி அபராதம்
மிடில் ஆர்டரில் துபே கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொதப்புகின்றனர். ஃபினிஷர் தோனி நான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் என அனைவருக்கும் தன் பேட்டால் பதில் சொல்லிவிட்டார். ஆல்ரவுண்டரும் கேப்டனுமான ஜடேஜாதான் ஃபார்முக்கு திரும்பவேண்டும். மைதானத்தில் அவர் நடந்துகொள்ளும் விதம் கேப்டன்ஷிப் அழுத்தத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதிலிருந்து மீண்டு உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபிப்பதுடன் சென்னை அணியையும் கரை சேர்ப்பார் என ஒட்டுமொத்த சி.எஸ்.கே ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை 7 போட்டிகளில் 3 இல் வெற்றி கண்டு பட்டியலில் 8 வது இடத்திற்கு பிந்தங்கியுள்ளது. பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இனிவரக்கூடிய அனைத்து போட்டிகலும் பஞ்சாப் அணிக்கு வாழ்வா சாவா போட்டிகளே. முதல் சந்திப்பில் சென்னையுடன் வெற்றி கண்டிருந்தாலும் தொடர்ந்து நான்கு தோல்விகளை கண்டு துவண்டுபோயுள்ள பஞ்சாப் ரசிகர்களை மீட்டெடுக்கவேண்டிய நிலைக்கு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பேட்டிங்கில் பேர்ஸ்டோ சொதப்புகிறார் எனவே அவருக்கு பதில் ராஜபக்சேவை மீண்டும் களமிறக்க வாய்ப்புள்ளது. லிவிங்ஸ்டன் மீண்டும் சென்னையுடன் இமாலய இன்னிங்ஸ் ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தவான், மயங் இருவரும் ஓபனிங்கில் கைகொடுக்கும் பட்சத்தில் அணிக்கு கூடுதல் பலமே. மிடில் ஆர்டரும் தமிழக வீரருமான சாரூக் கான் நடப்பு தொடரில் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை எனவே இக்கட்டான நேரத்தில் அணிக்கு கைகொடுக்க வேண்டும் என்றால் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம்.
பந்துவீச்சில் சென்னை அணி எப்படியோ அதே அளவுதான் பஞ்சாப் அணியும் ஒருவர் ஜொலித்தால் மற்ற அனைவரும் சொதப்பல்தான். ரபடாவின் அனுபவும், வேகமும் சென்னை அணிக்கு பவர் பிளேயில் சிம்ம சொப்பனமே. ஏற்கனவே இரண்டு முறை வீழ்த்தியுள்ளதால் அர்தீப் சிங்கை வைத்து ருத்துராஜ் விக்கெட்டை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளனர். ராகுல் சஹர் சுழல் நடப்பாண்டு தொடரில் அவ்வளவாக எடுபடவில்லை எனவே தனது திறமையை நிரூபிக்க இனிவரக்கூடிய போட்டிகளில் விக்கெட் வேட்டை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வான்கடே மைதானத்தை பொறுத்தவரை கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் முதலில் ஆடிய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் எடுக்கவே அதிகவாய்ப்புள்ளது. ஆனால் சென்னை அணி இதற்கு முன்பு வான்கடேவில் விளையாடிய கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியில் முதலில் விளையாடி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் இதற்கு முன்பு 26 முறை நேருக்கு நேர் மோதியதில் சென்னை அணி 15 போட்டிகளிலும் பஞ்சாப் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Super Kings, CSK, Dhoni, IPL 2022, MS Dhoni, Mumbai, Punjab Kings, Ravindra jadeja