ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022 CSK vs DC- ஒன்வே... அது கான்வே- ரிஷப் பண்ட்டின் கத்துக்குட்டி கேப்டன்சி- சிஎஸ்கே வெற்றியில் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது

IPL 2022 CSK vs DC- ஒன்வே... அது கான்வே- ரிஷப் பண்ட்டின் கத்துக்குட்டி கேப்டன்சி- சிஎஸ்கே வெற்றியில் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது

சிஎஸ்கே வெற்றி, பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உள்ளது.

சிஎஸ்கே வெற்றி, பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உள்ளது.

இந்த வெற்றி மூலம் சிஎஸ்கே 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் இந்த தொடரில் முதல் முறையாக கடைசி 2 இடங்களை விட்டு அகன்று 8ம் இடம் என்ற கடைசி 3 இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகளில் வென்றால் 14 புள்ளிகளைப் பெற்று ராஜஸ்தான், ஆர்சிபியுடன் இணைய வாய்ப்புள்ளது. இதனால் டெக்னிக்கலாக பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் சிஎஸ்கேவுக்கு உள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  மும்பை, டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற டாடா ஐபிஎல் (Tata IPL 2022) 55-வது போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பேட்டிங்கில் டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் பிரமாதப்படுத்த தோனி வழக்கம் போல் 2 சிக்சர்களுடன் பினிஷிங் டச் கொடுக்க பவுலிங்கில் மொயின் அலி 3 விக்கெட்டுகளைச் சாய்க்க ஒரு துல்லியமான தினமாக சிஎஸ்கே அணிக்கு அமைந்தது.

  சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு உள்ளது... ஆனால்:

  இந்த வெற்றி மூலம் சிஎஸ்கே 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் இந்த தொடரில் முதல் முறையாக கடைசி 2 இடங்களை விட்டு அகன்று 8ம் இடம் என்ற கடைசி 3 இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகளில் வென்றால் 14 புள்ளிகளைப் பெற்று ராஜஸ்தான், ஆர்சிபியுடன் இணைய வாய்ப்புள்ளது. இதனால் டெக்னிக்கலாக பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் சிஎஸ்கேவுக்கு உள்ளது. ஆனால் இறுதி 4-ற்குள் செல்ல பெரிய அளவு இனி சிஎஸ்கேவுக்கு அதிர்ஷ்டம் வேண்டும், அல்லது பெரிய அளவில் விட்டுக்கொடுப்புகள் இருந்தால்தான் உண்டு. மாறாக டெல்லி கேப்பிடல்ஸ் தற்போது 5ம் இடத்தில் இருக்கிறது, சன் ரைசர்ஸும் பஞ்சாப் கிங்சும் 10 புள்ளிகளுடன் இருப்பதால் 5ம் இடத்திலிருந்து டெல்லி 7ம் இடத்துக்கு சரிய வாய்ப்புள்ளது.

  208 ரன்களைக் குவித்த சிஎஸ்கே பிறகு டெல்லி கேப்பிடல்ஸை எழும்ப விடமால் 117 ரன்களுக்கு முடக்கியது.

  சிஎஸ்கே அணியில் மீண்டும் என் வழி தனி வழி என்று டெவன் கான்வே வெளுத்து வாங்கினார். 49 பந்துகளில் 7 பவுண்டரி 5 சிக்சர்களை விளாசி 89 ரன்கள் குவித்தார். குல்தீப் யாதவை மட்டுமே 4 பவுண்டரி 3 சிக்சர்களை விளாசினார் டெவன் கான்வே. சொல்லி சொல்லி அடித்தார் குல்தீப் யாதவ்வை.

  ரிஷப் பண்ட்டின் கத்துக்குட்டி கேப்டன்சி:

  பிட்ச்கள் எல்லாம் பேட்டிங் பிட்ச்களாக மாறிவரும் நிலையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுக்காமல் பீல்டிங்கை தேர்வு செய்தார் ரிஷப் பண்ட், இது முதல் தவறு. 2வது தவறு முதல் ஓவரை ஷர்துல் தாக்கூரிடம் கொடுத்தார். அவர் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே கொடுத்து 6 ரன்களுக்குள் ஓவரை முடித்தார். இன்னொரு முனையில் கலீல் அகமட் அருமையாகவ் வீசினார்.

  உடனே 2வது ஷர்துலிடம் கொடுத்திருந்தால்தானே அவர் பேட்டர்களை ஒர்க் அவுட் செய்ய முடியும்? உடனே ஒரு பவுலிங் சேஞ்ச், ஆன்ரிச் நார்ட்யேவை கொண்டு வந்தார். அவரை வந்தவுடனேயே ருதுராஜ் அருமையாக நேர் சிக்ஸ் விளாசினார். அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது, மோசமான கேப்டன்சி. ஒரு கட்டத்தில் ருதுராஜ் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை டெவன் கான்வேவுக்கு அருமையாக கொடுத்தார். கான்வே பவுண்டரிகளாக விளாசித்தள்ளினார், அவரை எடுக்க முடியவில்லை அவருக்கு வீசவும் முடியவில்லை, குல்தீப் யாதவ்வின் டெக்னிக்கான பந்தை மெதுவாக பிளைட் செய்வது என்பதை பந்து வந்தவுடன் ஆடி உடைத்தார்.

  ரிஷப் பண்ட் செய்த இன்னொரு கத்துக்குட்டி தனம் அக்சர் படேலை யாராவது பவர் ப்ளேவுக்குள் கொண்டு வருவார்களா? கலீல் அகமட் 2 ஓவர் 9 ரன்கள், ஷர்துல் ஒரு ஓவர் 5 ரன், நார்ட்யே 15 ரன்களை ஒரே ஓவரில் கொடுத்து உத்வேகமளித்தார். அக்சர் படேல் வந்தவுடன் 2 சிக்சர்களை டவுன் த ட்ராக்கில் வந்து அடித்தார் கான்வே. 8வது ஓவரில் குல்தீப் யாதவ் வந்தவுடன் ஸ்வீப், லாஃப்ட் என்று 2 சிக்சர்களை அடித்தார் கான்வே. ட்ரைவ் அடித்து ஒரு நான்கையும் அடித்தார். 2 ஓவர்களை விளாசியதில் 28 பந்துகளில் கான்வே 50 ரன்களை விளாசினார். இது அவரது தொடர்ச்சியான 3வது அரைசதமாகும்.

  முதல் ஓவரிலேயே 18 ரன்கள் கொடுத்த குல்தீப் யாதவ்வை கட் செய்யாமல் அவரையே நம்பினார் ரிஷப் பண்ட் இதுதான் கத்துக்குட்டி கேப்டன்சி என்பது. இந்த முறை எங்கு அடிக்கட்டும் என்று கேட்டு, சரி கவர் எக்ஸ்ட்ரா கவர் இடையே 3 பவுண்டரிகள் அடித்தார். அந்த இடத்தில் ஒரு பீல்டரை உடனடியாக நிறுத்தத் தெரியவில்லை ரிஷ்ப பண்ட்டிற்கு. ருதுராஜ் கெய்க்வாட் நார்ட்யேவின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு அவுட் ஆகும் போது 41 ரன்களை எடுத்திருந்தார். ஆனால் ஸ்கோர் 10ம் வாய்ப்பாடு சொன்னது. 11 ஓவர்களில் 110/1 என்று இருந்தது.

  ஜடேஜா காயத்தினால் இல்லாததால் ஷிவம் துபே இறங்கி ஷர்துல் தாக்கூரை 6,6,4 என்று விளாசினார், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் போன்றோரை முதலிலேயே 4 ஓவர்கள் கொடுத்து முடித்து விட வேண்டும் அல்லது 3 ஓவர்கள் கொடுத்து விட வேண்டும். கேப்டன்சி நுணுக்கத்தில் ரிஷப் பண்ட் இன்னும் பாலபாடமே கற்கவில்லை. இந்தக் கட்டத்தில்தான் கான்வே கொஞ்ச நேரம் ஸ்ட்ரைக்குக்கு வராமல் 87 ரன்களில் தேங்கியிருந்து கடைசியில் 17வது ஓவரில் அவுட் ஆனார். இவராகவே அவுட் ஆனார். இவரையெல்லாம் யாரும் எடுக்க முடியாது, 13 ரன்களில் சத வாய்ப்பு பறிபோனது.

  தோனி இறங்கினார் 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார். மொயின் அலியும் பவுண்டரிகள் அடித்தார். தோனி 8 பந்துகளில் 21 என்று பினிஷிங் டச் கொடுக்க கடைசி ஒவர் ஓரளவுக்கு டைட் ஆனாலும் ஸ்கோர் 208 ரன்கள் வருவதை தடுக்க முடியவில்லை.

  டெல்லி சரிவு - ஷா இல்லை, பரத் இருந்தார் ஆனால் சோபிக்கவில்லை:

  டெல்லி ஓப்பனிங்கே சரியில்லை இத்தனை போட்டிகளாக உட்கார வைத்து விட்டு ஒரு முக்கியமான போட்டியில் கே.எஸ்.பரத்தை இறக்கி விட்டு அவர் புல் ஷாட் ஆடுகிறேன் என்று சிமர்ஜீத் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். டேவிட் வார்னர் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 19 ரன்கள் என்று அபாயகரமாக ஆடிய நிலையில் தேவையில்லாமல் மிகவும் ஆரம்பத்திலேயே ரிவர்ஸ் ஷாட் ஆடப்போய் மகீஷ் தீக்சனா பந்தில் எல்.பி.ஆனார். தோனி மிகபிரமாதமகா அதற்கு அப்பீல் செய்தார். பந்து ஸ்டம்பைத் தாக்குவது ரிவியூவில் தெரிந்தது, ஆனால் வார்னர் தன் பேட்டில் பட்டது என்ற ஒரு கருதுகோளில் அதிருப்தியுடன் வெளியேறினார்.

  ரிஷப் பண்ட் (21), மிட்செல் மார்ஷ் (25) இணைந்து அதிரடி காட்டினர். இருவரும் 7 பவுண்டரிகள் 1 சிக்சரை அடித்து கொஞ்சம் தெம்பு கூட்டினர். 7.3 ஓவர்களில் 72 ரன்கள் வந்தது. பிறகுதான் மொயின் அலி வந்தார், மிட்செல் மார்ஷை கேட்சில் வெளியேற்றினார், ரிஷப் பண்ட்டைப் பவுல்டு செய்தார். இறங்கி வந்து அடிக்காமல் ஒதுங்கிக் கொண்டு ஆட முற்பட்டு மட்டையின் அடிவிளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். ரிபல் படேலையும் உடனடியாக அலி காலி செய்ய , அக்சர் படேலை முகேஷ் சவுத்ரி எடுக்க, அபாய வீரர் ரோவ்மென் போவெல்லை முகேஷ் சவுத்ரி தோனி கேட்சுக்கு வெளியேற்ற 85/7 என்று வெளிறியது டெல்லி. ஷர்துல் இறங்கி 19 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்தார், ஆனால் 117 ரன்களில் டெல்லி முடங்கி பெரிய தோல்வியை 91 ரன்கள் வித்தியாசத் தோல்வியைச் சந்தித்தது. ஆட்ட நாயகன் டெவன் கான்வே.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricket, CSK, Delhi Capitals, IPL 2022, MS Dhoni, Rishabh pant