Home /News /sports /

பேட்டிங்கில் சொதப்பிய வீரர்கள்: துபே மட்டும் ஆறுதல்- தொடர் தோல்வியில் சென்னை

பேட்டிங்கில் சொதப்பிய வீரர்கள்: துபே மட்டும் ஆறுதல்- தொடர் தோல்வியில் சென்னை

பஞ்சாப் வீரர்கள்

பஞ்சாப் வீரர்கள்

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 11-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவன் களமிறங்கினர். கேப்டன் மயங்க் அகர்வால் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பானுகா ராஜபக்ச 9 ரன்களில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

    அதனையடுத்து, ஷிகர் தவன், லியம் லிவிங்ஸ்டன் இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை அதிரடியாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் தவித்த நிலையில் தவன், லிவிங்ஸ்டன் சிறப்பாக ஆடினர். தவன் 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ப்ராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருடைய ஆட்டமிழப்புக்குப் பிறகு பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்தது. 10 ஓவருக்கு 115 ரன்களை பஞ்சாப் கடந்த நிலையில் ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இரண்டாம் பாதியில் களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழக்க அணியின் ரன் வேகம் குறைந்தது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் 180 ரன்களைக் குவித்தது. சென்னை அணி சார்பில் ஜோர்டன், ட்வைன் ப்ரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, ரூத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ரூத்ராஜ் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம், ராபின் உத்தப்பாவும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    லிவிங்ஸ்டன் அதிரடி- 180 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி

    அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். அம்பதி ராயுடு 13 ரன்களிலும், கேப்டன் ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 36 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அந்த நேரத்தில் ஷிவம் துபே மட்டும் அதிரடியாக ஆடி சென்னையை சரிவிலிருந்து மீட்டார். அவருக்கு தோனி பார்ட்னர்ஷிப் அளித்தார். துபே 30 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தோனி நிதானமாக ஆடினார். தோனியும் 23 ரன்களில் சென்னை அணி 18 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CSK, IPL 2022

    அடுத்த செய்தி