Home /News /sports /

ஃபார்முக்கு வந்த கோலி: குஜராத்தை வீழ்த்தி குவாலிபயருக்கு காத்திருக்கும் பெங்களூரு

ஃபார்முக்கு வந்த கோலி: குஜராத்தை வீழ்த்தி குவாலிபயருக்கு காத்திருக்கும் பெங்களூரு

கோலி, டூ ப்ளஸிஸ்

கோலி, டூ ப்ளஸிஸ்

குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 67-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விரித்திமான் சஹா, ஷப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ஷப்மன் கில் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வேட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். சஹாவும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 8 ஓவர்களுக்கு 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் அணி. அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடினார்.

    47 பந்துகளில் 62 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பாண்டியா. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 168 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, பாஃப் டூப்ளஸிஸ் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்தத் தொடரில் ஃபார்ம் இல்லாமல் தவித்த கோலி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி ஒருபுறம் அதிரடியாக ஆட அவருக்கு டூப்ளஸிஸ் சிறப்பான பார்டனர்ஷிப் கொடுத்தார்.

    இந்த இணை 12 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. சிறப்பாக ஆடிய டூப்ளஸிஸ் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மறுபுறம் சிறப்பாக ஆடிய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த க்ளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    பெங்களூரு அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. குஜராத் அணி ஏற்கெனவே குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பெங்களூரு அணியைப் பொறுத்தவரை 16 புள்ளிகளுடன் தற்போது 4-வது இடத்தில் உள்ளது. ஆனால், ரன்ரேட் மைனஸில் உள்ளது. ஐந்தாவது இடத்திலுள்ள டெல்லி அணிக்கு 21-ம் தேதி மும்பை அணியுடன் போட்டி. அதில், டெல்லி வெற்றி பெற்றால் குவாலிபயர் சுற்று வாய்ப்பை பெங்களூரு அணி இழக்கும். இல்லையென்றால் குவாலிபயர் சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெறும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022, RCB

    அடுத்த செய்தி