Home /News /sports /

பேட்டிங்கில் கலக்கிய கோலி, ராவட் இணை- மும்பையை எளிதாக வீழ்த்திய பெங்களூரு அணி

பேட்டிங்கில் கலக்கிய கோலி, ராவட் இணை- மும்பையை எளிதாக வீழ்த்திய பெங்களூரு அணி

கோலி

கோலி

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். ப்ளே ஆப்பில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது மும்பை அணி. ஏழாவது ஓவரை போட வந்தார் ஹர்ஷல் பட்டேல். அவருக்கு கை மேல் பலன் கிடைத்தது.

    ரோஹித் சர்மா எதிர்கொண்ட ஹர்ஷல் பட்டேலின் முதல் பந்திலேயே அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டத்தை இழந்தார். அப்போது, அவர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்துவந்த டீவால்ட் ப்ரீவிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மறுபுறம் நிதானமாக ஆடிய இஷான் கிஷனும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மும்பை அணியில் சூர்யாகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று ஆடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சூர்யாகுமார் மட்டும் கடைசிவரையில் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களைக் குவித்தார். அதன்மூலம், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஃபாஃப் டூப்ளஸிஸ், அனுஜ் ராவத் களமிறங்கினர்.

    தனி ஒருவனாக போராடிய சூர்யகுமார்: 151 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ்

    டூப்ளஸிஸ் 24 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உனத்கட் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அனுஜ் ராவட், விராட் கோலி இணை ஜோடி சேர்ந்தது. அனுஜ், கோலி இணை சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ராவட் 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார்.

    அதனையடுத்து, தினேஷ் கார்த்திக், க்ளென் மேக்ஸ்வெல் இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியைப் போல மும்பையும் 4-வது போட்டியில் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி