IPL 2022 - ஐபிஎல் திருவிழா: 25 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி
IPL 2022 - ஐபிஎல் திருவிழா: 25 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி
ஐபிஎல் 2022
ஐபிஎல் போட்டிகள் 26ம் தேதி தொடங்குகிறது, இதற்கு பார்வையாளர்களை அனுமதிக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது, கோவிட்-19 விதிமுறைகளுக்கு இணங்க ஸ்டேடியம் கொள்ளளவில் 25% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. போட்டிகள் மும்பை, நவி மும்பை மற்றும் புனே மைதானங்களில் நடைபெறும். ஐபிஎல் 2022 மும்பையில் கேகேஆரை சிஎஸ்கே எதிர்கொள்வதன் மூலம் மீண்டும் தொடங்குகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் அரங்கங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை உறுதி செய்துள்ளது. ஐபிஎல் 2022 போட்டிகள் மகாராஷ்டிராவில் - மும்பையில் மூன்று மைதானங்களில் 55 லீக் போட்டிகள் மற்றும் புனேவில் 15 போட்டிகள் என்று நடைபெறுகின்றன.
ஐபிஎல் 2022 மார்ச் 26 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக குறுகிய இடைவெளிக்குப் பிறகு 15 வது ஐபிஎல் ரசிகர்களை மீண்டும் மைதானங்களுக்கு வரவேற்கும் என்பதால் இந்த போட்டி ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக இருக்கும்.
எல்லா நேரத்திலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தங்களுக்குப் பிடித்த வீரர்களை உற்சாகப்படுத்த, கடைசி வரை விறுவிறுப்பான போட்டிகளைக் காண தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தயாராகிவிட்டனர்.
போட்டியின் லீக் கட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளமான www.iplt20.com இல் மார்ச் 23 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கலாம்.
கோவிட்-19 நெறிமுறைகளின்படி போட்டிகள் 25% பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் மும்பை, நவி மும்பை மற்றும் புனேவில் உள்ள மைதானங்களில் விளையாடப்படும். மொத்தத்தில், வான்கடே மைதானம் மற்றும் DY பாட்டீல் மைதானத்தில் தலா 20 போட்டிகளும், புனேவில் உள்ள பிரபோர்ன் மற்றும் MCA சர்வதேச மைதானத்தில் தலா 15 போட்டிகளும் நடைபெறும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.