ஐபிஎல் மெகா ஏலத்தில் அனைத்து அணிகளுக்கான விதிமுறைகள் வெளியாகி உள்ளது. ஒரு அணியில் எத்தனை வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளலாம், புதிய அணிகளுக்கான விதிகள் உள்ளிட்டவை தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் எந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. க்ரிக்இன்போ தகவலின் படி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பழைய அணிகள் 4 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். அதில் குறைந்தபட்சம் 2 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி ஒவ்வொரு அணியும் 2 இந்திய வீரர்கள் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். இதே போல புதிதாக வரவுள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கும் புதிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது ஏற்கனவே உள்ள 8 அணிகளும், தங்களுக்கு தேவையான 4 வீரர்களை தக்கவைத்த பின்பு, மீதமுள்ள வீரர்களில் யாரேனும் 3 வீரர்களை புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பே ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம்.
அதாவது ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். இதில் 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரர் என்ற வடிவத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சீசனில் இந்த தொகை ரூ.85 கோடியாக இருந்தது.
அடுத்த ஆண்டு 10 அணிகள் விளையாட உள்ளதால் போட்டிகளின் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவில் 5 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் அணிகள் தங்களுக்கு இரண்டு முறை மோத வேண்டும். இரு பிரிவுகளிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.