ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 2ம் நாளான இன்று பேட்டர்கள் ஏலத்தில் ரகானேயை ரூ.1 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது, ஆனால் புஜாரா பாவம், இவரை வாங்க யாரும் முன்வரவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் ஒப்புக்கு சப்பாணியாக இருந்தார். இந்த முறை அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது
ஆனால் பெரிய அதிர்ச்சி என்னவெனில் கொல்கத்தா அணிக்கு கேப்டன்சி செய்த இங்கிலாந்து குறைந்த ஓவர் கிரிக்கெட் அணி கேப்டன் இயான் மோர்கனையும் எந்த அணியும் வாங்க முன்வரவில்லை, காரணம், அவர் கடந்த முறை ஒன்றுமே ஆடவில்லை, 8தான் அதிகபட்ச ஸ்கோர் என்று தெரிகிறது, ஒன்றுமே ஆடவில்லை, செம சொதப்பு சொதப்பினார், இதனால் இந்த முறை அவர் ஏலம் எடுக்கப்படவில்லை.
For IPL Auction 2022 day 2 live coverage - click here
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டெஸ்ட் வீரர் மார்னஸ் லபுஷேன் விற்கப்படவில்லை. அதே போல் நம்பர் 1 டி20 வீரராக இருந்த இங்கிலாந்தின் டேவிட் மலானையும் யாரும் வாங்க விரும்பவில்லை.
ஆனால் மந்தீப் சிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணியினால் ரூ.1.1 கோடிக்கு ஏலம் எடுத்தது இவரெல்லாம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கே பிறந்தவர் தான். கடந்த முறை மும்பை இந்தியன்ஸுக்கு ஆடிய உடம்பு பெருத்து போன சவுரவ் திவாரி இந்த முறை மும்பையினால் கூட வாங்கப்படவில்லை இத்தனைக்கும் அவர் கடந்த முறை அதிக ஸ்கோரை எடுத்தவர்தான்.
எல்லாரை விடவிம் ஆச்சரியம் ஆஸ்திரேலிய டி20 வெற்றி உலகக்கோப்பை கேப்டன் ஏரோன் பிஞ்சை எடுக்க ஆளில்லை என்பது பெரிய அதிசயம்தான். மாறாக தண்டமாக ஆடும் இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டனுக்கு ரூ.11.5 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் ஏலம் எடுத்தது.
மேற்கிந்திய அணியின் டோமினிக் ட்ரேக்ஸ் ரூ.1.1 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸினால் ஏலம் எடுக்கப்பட்டார். நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் விற்கப்படவில்லை. இந்திய டெஸ்ட் ஒருநாள் அணியின் ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ரூ.1.7 கோடிக்கு குஜராத்தினால் ஏலம் எடுக்கப்பட்டார்.
அதே போல் தமிழக ஆல்ரவுண்டர் முன்னாள் சன் ரைசர்ஸ் வீரர் விஜய் சங்கர் ரூ.1.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் சென்றார், சென்னை இவருக்கு ரூ.1.2 கோடி வரை வந்தது, பிறகு கைவிட்டது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் செல்லுபடியாகவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, Cheteshwar Pujara, IPL 2022, IPL Auction