Home /News /sports /

IPL Auction 2022- Faf du Plessis- பெரிய வீரரைக் கோட்டை விட்ட சிஎஸ்கே: டுபிளெசிஸ் ஆர்சிபி

IPL Auction 2022- Faf du Plessis- பெரிய வீரரைக் கோட்டை விட்ட சிஎஸ்கே: டுபிளெசிஸ் ஆர்சிபி

ஃபாப் டுபிளெசிஸ்

ஃபாப் டுபிளெசிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து ஆடிய ஃபாப் டுபிளெசிஸை ஏலம் எடுக்க ஏனோ சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்வம் காட்டவில்லை, அவரை ஆர்சிபி அணி ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து ஆடிய ஃபாப் டுபிளெசிஸை ஏலம் எடுக்க ஏனோ சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்வம் காட்டவில்லை, அவரை ஆர்சிபி அணி ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது.

    ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு மாற்றாக அவரைக் கருதியிருக்கிறது ஆர்சிபி என்பது வெளிப்படை. ரூ.3 கோடிக்கு டுபிளெசிஸ் வந்தவுடனேயே சிஎஸ்கே மேலே செல்ல விரும்பவில்லை விட்டு விட்டனர்.

    அவரது ஐபிஎல் இன்னிங்ஸ் போலவே அவரது விலையும் கிடுகிடுவென உயர்ந்து ரூ.5 கோடியைத் தாண்டியது. சிஎஸ்கே மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் டெல்லி அணி வந்து விலையை ஏற்றி விட்டு ஆர்சிபியின் பர்சைக் காலி செய்ய முயற்சி செய்தது, அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்ட பிறகு ஒதுங்கியது.

    கடைசியில் ஆர்சிபி அணி ரூ.7 கோடிக்கு டுபிளெசிசை ஏலம் எடுத்தது, ஏ.பி.டிவில்லியர்ஸ் இல்லை, அவருக்கு பதிலாக டிவில்லியர்ஸின் பள்ளித்தோழர் டுபிளெசிஸ் ஆர்சிபி அணிக்கு வந்துள்ளார்.

    ஏலத்தில் குவிண்டன் டி காக் ரூ.6.75 கோடிக்கு லக்னோவுக்குச் சென்றார். டேவிட் வார்னர் எதிர்பார்க்கப்பட்டது போல் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருக்கும் டெல்லி கேப்பிடஸ் அணிக்குச் சென்றார், அவருக்கு டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.6.25 கோடி கொடுக்கிறது.

    வார்னர் ஐபிஎல் அறிமுகத்தில் ஆடியதே டெல்லிக்குத்தான் முதலில் . இந்நிலையில் அவர் தாய்வீடு திரும்பினார், அதுவும் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருக்கும் டெல்லியில் இணைந்து விட்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Faf du Plessis, IPL 2022, IPL Auction, Lucknow Super Giants, RCB

    அடுத்த செய்தி