Home /News /sports /

தோனி, ஹர்திக் பாண்டியா கூட இவர் பவுலிங்ல திணற்ராங்க- செம பவுலர்-இர்பான் பதான் புகழும் பவுலர்

தோனி, ஹர்திக் பாண்டியா கூட இவர் பவுலிங்ல திணற்ராங்க- செம பவுலர்-இர்பான் பதான் புகழும் பவுலர்

தோனி

தோனி

கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் 2022 தொடரில் 13 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினாலும் தோனி, ஹர்திக் பாண்டியா போன்ற பெருந்தலைகளைக் கட்டிப் போட்டு பிறகு தட்டிப்போட்டு எடுக்கிறார் அர்ஷ்தீப் சிங் என்கிறார் இர்பான் பதான்.

மேலும் படிக்கவும் ...

    நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராகவும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், டெல்லி அணியை இது 159 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது. ஆனால் பஞ்சாப் அணி அதைவிடவும் மோசமாக ஆடி தோற்றது. அன்று சிஎஸ்கேவுக்கு எதிராக தோனியை பெரிய அளவில் ஷாட்களை ஆட விடாமல் தடுத்தாட்கொண்டார், ஹர்திக் பாண்டியாவுக்கும் இப்படித்தான் சவால் விடுத்தார் அர்ஷ்தீப் சிங்.

    இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கை புகழ்ந்து பேசிய இர்பான் பதான், “அர்ஷ்தீப் சிங் ஒரு சிறப்பான வீரர். அவரிடம் தன்னம்பிக்கை இருக்கிறது, இளம் பவுலராக இருக்கிறார், துல்லியம் இருக்கிறது. இது மற்ற பவுலர்களிடமிருந்து அவரை தரம்பிரித்துக் காட்டுகிறது.

    தோனி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பெரிய பிளேயர்களையெல்லாம் பேசாமல் ஆடுமாறு கட்டுப்படுத்துகிறார். இவர் போன்ற வீரர்களை இப்படி கட்டிப்போட்டு வீழ்த்துகிறார், அதுவும் டெத் ஓவர்களில் அவர்களை கட்டுப்படுத்துவது சாதாரண காரியமல்ல. இந்த ஒரு தன்மையே அவரது திறமை பற்றி எக்க்சச்சக்கமாக நமக்கு கோடிட்டு காட்டுகிறது.

    ரபாடா போன்றவர்கள் பஞ்சாப் ஓய்வறையில் இருக்கிறார்கள் இது ஒருபுறமிருக்க, இந்தியாவுக்காக இன்னும் ஆடாத அர்ஷ்தீப் சிங் அனைவரையும் ஈர்க்கிறார் என்றால் அது சாதாரண காரியமல்ல. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அவர்தான் இனி பெரிய பிளேயராக இருப்பார்.” என்றார் இர்பான் பதான்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hardik Pandya, IPL 2022, MS Dhoni

    அடுத்த செய்தி