ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆந்த்ரே ரஸல் ஆல்ரவுண்ட் அதிரடி; வாஷிங்டன் சுந்தரின் படுமோசமான 20வது ஓவர்; கேன் வில்லியம்சனின் மோசமான ஐபிஎல் தொடர்- KKR-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு

ஆந்த்ரே ரஸல் ஆல்ரவுண்ட் அதிரடி; வாஷிங்டன் சுந்தரின் படுமோசமான 20வது ஓவர்; கேன் வில்லியம்சனின் மோசமான ஐபிஎல் தொடர்- KKR-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு

ஆட்ட நாயகன் ரஸல்

ஆட்ட நாயகன் ரஸல்

புனேயில் லேசான கிரீன் டாப் பிட்சில் சன் ரைசர்ஸ் மடிந்தது.கொல்கத்தாவிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது, இதன் மூலம் கொல்கத்தா 12 புள்ளிகள் மற்றும் 0.160 என்ற நல்ல நிகர ரன் விகித உயர்வால் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது, இப்போது புள்ளிகள் அட்டவணையில் 6ம் இடத்தில் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  புனேயில் லேசான கிரீன் டாப் பிட்சில் சன் ரைசர்ஸ் மடிந்தது.கொல்கத்தாவிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது, இதன் மூலம் கொல்கத்தா 12 புள்ளிகள் மற்றும் 0.160 என்ற நல்ல நிகர ரன் விகித உயர்வால் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது, இப்போது புள்ளிகள் அட்டவணையில் 6ம் இடத்தில் உள்ளது.

  டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து சாம் பில்லிங்ஸ் (34), ஆந்த்ரே ரஸல் (49) ஆகியோரின் அதிரடியில் 177/6 என்று நல்ல ஸ்கோரை எடுக்க தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியில் 3 பேர்தான் 2 இலக்க ஸ்கோரை எடுத்தனர், அபிஷேக் சர்மா 43 ரன்களுடன் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எடுக்க 7 பேர் ஒற்றை இலக்க ஸ்கோரில் முடிய சன் ரைசர்ஸ் 123/8 என்று முடிந்து படு தோல்வியடைந்தது.

  கேன் வில்லியம்சனுக்கு கேப்டனாகவும் பேட்டராகவும் மோசமான ஐபிஎல் தொடராக அமைந்தது.

  ஸ்ரேயஸ் அய்யர் சாமர்த்தியமான கேப்டன் என்பது தெரிந்தது, அதாவது டாஸ் வென்று பேட்டிங் எடுத்தார், கொல்கத்தாவின் நேற்றைய வெற்றியையும் சேர்த்து புனேயில் நடந்த 13 போட்டிகளில் 10 போட்டிகள் முதல் பேட் செய்த அணி வென்றுள்ளது.

  புவனேஷ்வர், குமார், மார்க்கோ யான்சென் லேசான கிரீன் டாப் பிட்சில் அசத்தினர் முதல் 4 ஓவர்களில் 2 பவுண்டரிகள் தான் வந்தன. வெங்கடேஷ் அய்யர் 7 ரன்களில் யான்சென் பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார். வழக்கம் போல் நிதிஷ் ராணா 16 பந்தில் 26 ரன் என்று கொல்கத்தாவுக்கு எனர்ஜி அளித்தார். டி.நடராஜன் 5வது ஓவரில் 18 ரன்களைக் கொடுக்க அதில்தான் நிதிஷ் ராணா 17 ரன்களை விளாசினார், பிறகு யான்செனை ஒரு சிக்ஸ் அடித்து பவர் ப்ளேயை ஓரளவுக்கு நல்லபடியாக முடித்தார் ராணா.

  அஜிங்கிய ரஹானே 3 சிக்சர்களுடன் 24 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். பிறகு வந்தா உம்ரன் மாலிக், இவர் ரஹானே, ராணா, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோரை சடுதியில் தன் அதிவேகத்தினால் வீட்டுக்கு அனுப்ப ரிங்கு சிங்கை நடராஜன் எல்.பி.செய்தார், பெரிய சர்ச்சை எழுந்தது, அது பேட்டிலும் பேடிலும் ஒரே சமயத்தில் பட்டது போல் தெரிந்தது. 12வது ஓவரே ரஸல் இறங்கினார் 12 ஓவர்களில் 94/5 என்று கொல்கத்தா திணறியது.

  ஆனால் ஆரம்பத்தில் மாலிக், ரசல், நடராஜன் ஆகியோர் ரசலின் ராட்சத மட்டையை சாந்தமாக வைத்திருந்தனர், ரஸல் முதல் 11 பந்துகளில் 10 ரன்கள்தான் பிறகு 23 பந்துகளில் 30 சென்றார். கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தரிடம் மட்டும் ஓவர் இருக்குமாறு ஏன் வைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. கடைசி ஓவரில் ஒரு ராட்சச மட்டை எதிர்முனையில் நிற்க வாஷிங்டன் ஓவர் என்ன ஆகுமோ என்று எதிர்பார்த்ததற்கு இணங்க 3 புல்டாஸ்களை வாஷிங்டன் சுந்தர் வீச மூன்றையும் முறையாக சிக்சர்களுக்கு அனுப்பினார் ரஸல், 49 நாட் அவுட். கொல்கத்தா 177 ரன்களை எட்டியது.

  சன் ‘டவுனர்ஸ்’ ஆன சன் ரைசர்ஸ்:

  பேட்டிங்கில் விளாசிய ரஸல் பிறகு பவுலிங்கிலும் 3 விக்கெட்டுகள் சாய்த்தார், சன் ரைசர்ஸ் சன் டவுனர்ஸ் ஆக காட்சியளித்தது, எந்த நிலையிலும் வெற்றி பெறுமாறு ஆடவேயில்லை, மந்தமான தொடக்கம். கென் வில்லியம்சன், மேட்ச் வின்னர் ராகுல் திரிபாதி சடுதியில் வெளியேறினர். அபிஷேக் சர்மா மட்டுமே தனி மனிதனாக 43 ரன்களுக்காக போராடினார்.

  மார்க்ரம் 32 ரன்களுக்கு சில பவுண்டரிகளை அடித்தாலும் உமேஷ் யாதவ் யார்க்கர் முயற்சியை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு அவுட் ஆனார். அபிஷேக் சர்மாவை வருண் சக்ரவர்த்தி பதம் பார்க்க, அதிரடி மன்னன் நிகோலஸ் பூரனை சுனில் நரைன் காட் அண்ட் பவுல்டு செய்து வெளியேற்றினார்.

  கேன் வில்லியம்சனை வெளியேற்றிய ரஸல், பிறகு வாஷிங்டன் சுந்தர், மார்க்கோ யான்சனை வெளியேற்ரி 4 ஓவர் 22 ரன் 3 விக்கெட் என்று ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார் சன் ரைசர்ஸ் 123/8 என்று முடிந்தது. டிம் சவுதி சிறப்பாக வீசி 2 விக்கெட்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, Kane Williamson, KKR, Shreyas Iyer, SRH