Home /News /sports /

ஐ.பி.எல். 2022 : அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா பலம் சேர்ப்பார்... பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் நம்பிக்கை

ஐ.பி.எல். 2022 : அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா பலம் சேர்ப்பார்... பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் நம்பிக்கை

ரஷித் கான், சுப்மன் கில் ஆகியோரையும் அணியில் எடுத்துள்ளோம். இருவரும் மிகச்சிறந்த வீரர்கள். தங்களது திறமையை பலமுறை நிரூபித்துள்ளார்கள். உலகின் பல இடங்களில் விளையாடிய அனுபவம் ரஷித் கானுக்கு உள்ளது.  - கேரி கிறிஸ்டன்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹர்திக் பாண்ட்யா, அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி சீசனில் 8 அணிகள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை என்ன பெயரில் அழைக்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக இரு அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன.

    அகமதாபாத் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா ரூ. 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதே தொகைக்கு ஆப்கன் ஆல் ரவுண்டர் ரஷித் கானும் அகமதாபாத் அணியில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அணி வீரர்கள் தேர்வு குறித்து கேரி கிறிஸ்டன் கூறியதாவது-

    ஹர்திக் பாண்ட்யா ஒரு இளம் கேப்டன். அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை நான் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். அவர் அணியை உற்சாகப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் அவரது ஆதிக்கம் அதிகம் இருக்கும் என நம்புகிறேன்.

    20 ஓவர்களை பொருத்தளவில் ஹர்திக் பாண்ட்யா மிகச்சிறந்த வீரர். அவர் விளையாட்டை நன்றாக புரிந்து வைத்துள்ளார். இதுவரை அவர் தலைமை பொறுப்புக்கு ஐபிஎல் தொடரில் வந்ததில்லை. ஆனால் அவரிடம் அத்தகைய பண்புகள் அதிகம் இருப்பதை பார்க்கிறேன்.

    இதேபோன்று ரஷித் கான், சுப்மன் கில் ஆகியோரையும் அணியில் எடுத்துள்ளோம். இருவரும் மிகச்சிறந்த வீரர்கள். தங்களது திறமையை பலமுறை நிரூபித்துள்ளார்கள். உலகின் பல இடங்களில் விளையாடிய அனுபவம் ரஷித் கானுக்கு உள்ளது. அவரை சிலமுறைதான் சந்தித்துள்ளேன். அவருடன் பணியாற்றியது கிடையாது.

    எனக்கு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வீரர்களிடம் உள்ள மிகச்சிறந்த திறமையை வெளிக் கொண்டுவதற்கு நான் முழு முயற்சி எடுப்பேன்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: IPL

    அடுத்த செய்தி