Home /News /sports /

IPL 2022 MI vs KKR - 30 பந்தில் 35 தேவையா.. எனக்கு 6 பந்து போதும்.. 6, 4, 6, 6, 2+நோபால், 4, 6 - வந்தேன், கண்டேன், வென்றேன் என்ற கமின்ஸ்

IPL 2022 MI vs KKR - 30 பந்தில் 35 தேவையா.. எனக்கு 6 பந்து போதும்.. 6, 4, 6, 6, 2+நோபால், 4, 6 - வந்தேன், கண்டேன், வென்றேன் என்ற கமின்ஸ்

மும்பை கன்வைத் தகர்த்த பாட் கமின்ஸ்

மும்பை கன்வைத் தகர்த்த பாட் கமின்ஸ்

அடுத்த பந்தில், இன்னொரு சிக்ஸ் அடிக்க , 24 பந்துகள் மீதமிருக்க KKR வென்றது ஷ்ரேயஸ் அய்யர் மகிழ்ச்சியில் துள்ள அவரது சீனியர் மும்பை நண்பர் ரோஹித் சர்மா இதயம் உடைந்தது.

    ஐபிஎல் 2022 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி தனது 161 ரன்கள் போதுமென்றுதான் நினைத்தது. ஆந்த்ரே ரஸல் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி 1 சிக்ஸ் என்று 11 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா 101/5 என்று தடுமாறியது. மும்பைக்கு நம்பிக்கை பிறந்தது, ஆனால் அப்போது வந்தார் பாட் கமின்ஸ், இவர் என்ன செய்து விடப்போகிறார் என்று ரோஹித் சர்மா அலட்சியமாகக் கூட நினைத்திருக்கலாம். ஆனால் வந்தார், கண்டார், வென்றார் பாட் கமின்ஸ் 15 பந்துகளில் 56, எதிர்முனையில் வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 50 நாட் அவுட், மும்பை அவுட், ,கொல்கத்தா வெற்றி.

    இருதரப்புத் தொடருக்காக பாகிஸ்தானில் இருந்த தங்கள் நட்சத்திர வீரர், ஆஸி. கேப்டன் பாட் கமின்ஸுக்காக இரண்டு வாரங்கள் காத்திருந்தது. கம்மின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டவுடன், லீக் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டதாக அமைந்தது. 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களாகக் குறைக்கப்பட்டபோது, ​​KKR இன் 162 ரன்களைத் துரத்துவது சிக்கலானது.

    14வது ஓவரில் ஆண்ட்ரே ரசல் ஆட்டமிழந்தது மும்பை இந்தியன்ஸின் நம்பிக்கையை அதிகரித்தது, அவர்கள் வெற்றி நம்பிக்கையை அதிகரித்தது. . ஆனால் அப்போது எதிர்பாராதது நடந்தது. கடைசி 30 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் ரோஹித் ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸை தாக்குதலுக்கு கொண்டு வந்தார். கம்மின்சிடம் ஸ்ட்ரைக் இருந்தது, ஐம்பது அடித்த வெங்கடேஷ் ஐயருக்கு ஸ்ட்ரைக் கொடுப்பார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் அய்யர் என்னத்துக்கு நானே முடிச்சுடறேன் என்று நினைத்தார் போலும்.

    ஏற்கெனவே மில்சை ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று விளாசியிருந்தார். டேனியல் சாம்ஸ் வீச வந்தவுடன் நேராக முதல் பந்து சிக்ஸ் ஆனது. அடுத்த பந்து மிட்விக்கெட்டில் பவுண்டரி ஆனது. அடுத்த பந்து டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ், அடுத்து பைன்லெக்கில் சிக்ஸ். அடுத்த பந்து கமின்ஸ் சூரியாவிடம் கேட்ச் கொடுத்தார் அது பிரமாத கேட்ச். ஆனால் ரோஹித் சர்மா தலையில் இடி விழுந்ததுபோல் நடுவர் நோ-பால் என்றார். அதாவது இடுப்புக்கு மேல் வந்த நோ-பால். அடுத்து டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரியில் 4 ரன்கள் பறக்க 14 பந்தில் அரைசதம் கண்டு கே.எல்.ராகுல் ஐபிஎல் சாதனையை சமன் செய்தார்.

    அடுத்த பந்தில், இன்னொரு சிக்ஸ் அடிக்க , 24 பந்துகள் மீதமிருக்க KKR வென்றது ஷ்ரேயஸ் அய்யர் மகிழ்ச்சியில் துள்ள அவரது சீனியர் மும்பை நண்பர் ரோஹித் சர்மா இதயம் உடைந்தது. நான்கு போட்டிகளில் கேகேஆர் பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும், மேலும் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸின் 3வது தோல்வியாக இது அமைந்தது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, KKR, Mumbai Indians, Pat Cummins

    அடுத்த செய்தி