ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்த 4 இடங்கள் தேர்வு...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்த 4 இடங்கள் தேர்வு...

ஐபிஎல்

ஐபிஎல்

நடப்பு தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை போட்டிகள் இந்தியாவில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு 4 இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

  உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய 2 தேதிகள் பரிசீலனையில் உள்ளன.

  விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்படவுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் போட்டிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் நடத்துவதற்கு பிசிசிஐ முனைப்பு காட்டி வருகிறது.

  இதையும் படிங்க : ஐ.பி.எல். 2022 ஏலத்தில் பங்கேற்க 1,214 கிரிக்கெட் வீரர்கள் விருப்பம்... பெங்களூருவில் நடைபெறுகிறது மெகா ஏலம்

  தற்போது வரை அனைத்து போட்டிகளையும் மும்பையில் நடத்தி விடலாம் என்றும் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் வான்கிடே, சிசிஐ, டி.ஒய். பாட்டீல் ஆகிய 3 மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் புனே மைதானமும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

  ஒரேவேளை கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தால் போட்டிகளை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி ஐக்கிய அரபு அமீரகமும் பிசிசிஐ பரிசீலனையில் இருக்கிறது.

  இதையும் படிங்க : ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டிகளைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா? வெளியானது முக்கிய தகவல்

  போட்டி தொடங்குவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக வீரர்கள் பயோ பப்பிள் சூழலில் இருக்க வேண்டும் என்பதால், ஏப்ரல் 2ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

  நடப்பு தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை போட்டிகள் இந்தியாவில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 முறை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 2009-ல் ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்தது.

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தால் மட்டுமே போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும். இதேபோன்று இலங்கையில் ஐபிஎல் தொடரை நடத்தலாமா என்பது குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: IPL