குறைந்த பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள்: 360 டிகிரி ஏ.பி.டிவில்லியர்ஸ் சாதனை
குறைந்த பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள்: 360 டிகிரி ஏ.பி.டிவில்லியர்ஸ் சாதனை
ஏ.பி.டிவில்லியர்ஸ் சாதனை.
கவாஸ்கரே யாரையும் ஜீனியஸ் என்றெல்லாம் கூற மாட்டார், ஆனால் அவரே டிவில்லியர்ஸை ஜீனியஸ் என்று கூறுகிறார், அவரை தொடக்கத்தில் இறக்கி 20 ஓவர்கள் அவர் ஆட வேண்டும் என்று கூறுகிறார் என்றால் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்று விட்டார் ஏ.பி.டிவில்லியர்ஸ் என்றே பொருள்.
அகமதாபாதில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 ஆட்டத்தில் ஆர்சிபி அணி தடுமாறிய போது கைகொடுத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் விளாச டெல்லி அணி நிலைகுலைந்து போய் ஆர்சிபியிடம் தோல்வியடைந்தது.
ஆர்சிபி அணி முதலில் பேட் செய்து 171/5 என்று முடிய தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 170 வரை வந்து ஒரு ரன்னில் தோல்வி தழுவியது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அதிரடி மன்னன், தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி சுழன்று சுழன்று அடிக்கும் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரு சாதனையைப் புரிந்தார்.
அதாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை எட்டினார், அதோடு குறைந்த பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை எடுத்த முதல் வீரர் ஆனார்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் டிவில்லியர்ஸின் ஸ்ட்ரைக் ரேட் 174.35. ரவீந்திர ஜடேஜா 192 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ரிஷப் பந்த் ஸ்ட்ரைக் ரேட் 127 தான். டிவில்லியர்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் 2 அரைசதங்களை எடுத்துள்ளார். 16 பவுண்டரி 10 சிக்சர்கள் என பவுண்டரி விகிதத்திலும் கொடிநாட்டுகிறார் டிவிலியர்ஸ்.
ஐபிஎல் 2021-ல் அதிக ரன்கள் எடுத்துள்ள ஷிகர் தவான் (265) ஸ்ட்ரைக் ரேட்டே 140.21 தான் இத்தனைக்கும் பவர் ப்ளேயில் ஆடுகிறார். 33 பவுண்டரி 5 சிக்சர்கள் என்று பவுண்டரி விகிதம் நல்ல நிலையில் உள்ளது.
360 டிகிரி ஏ.பி.டிவில்லியர்ஸ் இந்த வயதிலும் தான் ஒரு தாதாகிரி என்பதை பேட்டிங்கில் நிரூபித்து வருகிறார்.
கவாஸ்கரே யாரையும் ஜீனியஸ் என்றெல்லாம் கூற மாட்டார், ஆனால் அவரே டிவில்லியர்ஸை ஜீனியஸ் என்று கூறுகிறார், அவரை தொடக்கத்தில் இறக்கி 20 ஓவர்கள் அவர் ஆட வேண்டும் என்று கூறுகிறார் என்றால் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்று விட்டார் ஏ.பி.டிவில்லியர்ஸ் என்றே பொருள்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.