• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சவுரவ் திவாரி திறமைக்கும் குறைவில்லை, ‘பருமனுக்கும்’க்கும் குறைவில்லை- சபா கரீம்

சவுரவ் திவாரி திறமைக்கும் குறைவில்லை, ‘பருமனுக்கும்’க்கும் குறைவில்லை- சபா கரீம்

சவுரவ் திவாரி

சவுரவ் திவாரி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் 30வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சவுரவ் திவாரி 40 பந்துகளில் அரைசதம் எடுத்தார், ஆனால் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற அதுபோதவில்லை, சிஎஸ்கே வெற்றி பெற்றது.

  • Share this:
    சவுரவ் திவாரி விக்கெட்டை வீழ்த்த தோனியும் முயற்சி செய்யவில்லை, ஏனெனில் அவரால் பவுண்டரியும் அடிக்க முடியவில்லை, ஒன்று, இரண்டு ரன்களுக்கு வேகமாக ஓடவும் முடியவில்லை, அதனால் சவுரவ் திவாரி இருந்து விட்டு போகட்டும் விட்டு விடுங்கள் அவரால் ஒன்றும் தீங்கு இல்லை பாவம் இருந்துட்டு போகட்டும் என்று தோனி விட்டு விட்டார் போலத்தான் தெரிந்தது. இல்லையெனில் பிராவோவை விட்டு ஒரு ஏத்து ஏத்தச் சொல்லி காலி செய்திருப்பார்.

    சவுரவ் திவாரி இறங்கியது உண்மையில் அதிர்ச்சியாகவே இருந்தது, முழு உடல் தகுதி பெற்றிருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருந்தது, திவாரியின் உடல் பருமன் கிரிக்கெட் ஆட்டத்திற்கானதல்ல அது பாக்சிங், மல்யுத்தம் போன்றவற்றுக்கு வேண்டிய உடம்பு போல்தான் தெரிகிறது.

    இந்நிலையில் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் சவுரவ் திவாரி பற்றிக் கூறும்போது, “நாங்கள் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை, சவுரவ் திவாரியிடம் திறமை இருக்கிறது. அவர் ஆட ஆரம்பித்தவுடனேயே அதுதெரிந்தது. நேற்றும் ஆடினார், ஆனால் ஒன்றை சொல்லி விடுவது நல்லது, அவர் டயட்டில் சரியாக இருக்க வேண்டும். பிட்னஸ் முக்கியம். சர்வதேச கிரிக்கெட்டராக ஆக வேண்டுமெனில் உடல் பிட்னெஸ்தான் மிக முக்கியம், டயட் கவனம் வேண்டும்.

    அவரைப் பார்க்க பாவமாகவே இருந்த்து, ஆனால் மும்பை அணிக்கு அவரால் ஆட முடிகிறதே அது அவருக்கு பெரிய விஷயம். டீசண்டாகவே நேற்று ஆடினார்” என்கிறார் சபா கரீம்.

    Also Read: சேவாக் முகத்தில் கரிபூசிய சென்னை சூப்பர் கிங்ஸ்: கேலி ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: