Home /News /sports /

IPL 2021- ஐபிஎல் 2021: பறிபோகிறதா ரிஷப் பந்த்தின் கேப்டன்சி?

IPL 2021- ஐபிஎல் 2021: பறிபோகிறதா ரிஷப் பந்த்தின் கேப்டன்சி?

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். காரணம் ஷ்ரேயாஸ் அய்யர் காயமடைந்ததால் ரிஷப் பந்த் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    ரிஷப் பந்த்தும் தன் தலைமையில் முதல் போட்டியிலேயே அனுபவ கேப்டன் ‘தல தோனி’யின் சிஎஸ்கே அணிக்கு சரியான உதைக் கொடுத்தார்.

    பிறகு அடுத்தடுத்து வெற்றிகளை வசப்படுத்தியது டெல்லி அணி. கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்படும் வரை 8 போட்டிகளில் 6ல் வென்று, புள்ளிப்பட்டியலில் நம்பர்.1 இடத்தை பிடித்தது டெல்லி கேபிட்டல்ஸ்.

    ஆனால் ரிஷப் பந்த் கேப்டன்சியில் தன் பேட்டிங்கில் தன் இயல்பான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி ஆடவில்லை, கொஞ்சம் தடவினார், பெரிய இன்னிங்ஸ்களை ஆடவில்லை.

    கேப்டன்சி கூட ஸ்டீவ் ஸ்மித் உதவியுடன் தான் செய்தார் என்ற பேச்சுக்கள் எழுந்தன.

    இந்நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளும் வரும் செப்டம்பர் மாதம் அமீரகத்தில் தொடங்க உள்ளது. தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி வீரர்கள், டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இங்கிலாந்தில் இருந்தபடியே நேராக அமீரகம் வந்து சேர்ந்து, அங்கிருந்தே அவரவர்களின் ஐபிஎல் அணியுடன் இணைந்து கொள்வார்கள். அதன்படி. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்தும் கேப்டனாக அணியுடன் இணைந்து கொள்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் இந்த 31 போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஷ்ரேயஸ் அய்யர் மீண்டும் ஆடவிருக்கிறார், இதனால் கேப்டன்ஷிப் இவரிடமே மீண்டும் அளிக்கப்பட்டு ரிஷப் பந்த்தின் சுமை குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "என் தோள்பட்டையை குணப்படுத்தும் மருத்துவ சிகிச்சைகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக தயாராகிவிடுவேன். இதனால், நான் நிச்சயம் அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவது உறுதி” என்று தெரிவித்துள்ளதால் ரிஷப் பந்த் கேப்டன்சி பாதியிலேயே முடிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் கேப்டன்ஷிப் பற்றி தன்னடக்கமாக அய்யர் கூறுகையில், “கேப்டன் பதவியைப் பற்றி எனக்குத் தெரியாது, அது அணியின் பயிற்சியாளர், உரிமையாளர்கள், அணி நிர்வாகத்தின் கைகளில் உள்ளது. ஆனால் அணி ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது, நாங்கள் இப்போது புள்ளிப்பட்டியலில் மேலே இருக்கிறோம், அதுதான் எனக்கு மிகவும் முக்கியமானது. டெல்லி இதற்கு முன்பு ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே, கோப்பையை ஏந்த வைப்பதே எனது ஒரே குறிக்கோள்" என்கிறார் அய்யர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Delhi Dare Devils, IPL 2021, Rishabh pant

    அடுத்த செய்தி