• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இன்றைய மும்பை போட்டியில் ரோஹித், பாண்டியா ஏன் இடம்பெறவில்லை? பொல்லார்ட் விளக்கம்

இன்றைய மும்பை போட்டியில் ரோஹித், பாண்டியா ஏன் இடம்பெறவில்லை? பொல்லார்ட் விளக்கம்

ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

CSK vs MI Live, IPL 2021: சென்னை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ஏன் பங்கேற்கவில்லை என்று கெய்ரன் பொல்லார்ட் விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்திருந்தநிலையில், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதற்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும், மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்தநிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீகரகத்தில் மும்பை மற்றும் சென்னை அணி மோதும் போட்டி நடைபெற்றுவருகிறது. இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ப்ளேயிங் 11-ல் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. பல போட்டிகளில் கடைசி ஓவர்களில் வான வேடிக்கை காட்டியவர் பாண்டியா. அதனால், அவர் அணியில் இல்லாதது ரசிகர்களை சோகப்படுத்தியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
    POINTS TABLE:

    SCHEDULE TIME TABLE:

    அப்போது பேசிய மும்பை அணியின் கேப்டன் கெய்ரன் பொல்லார்ட், ‘டாஸில் தோற்றது மகிழ்ச்சியாக உள்ளது. ரோஹித் சர்மா நலமாக உள்ளார். அவர் விரைவில் நலமடைவார். நான் இன்று மட்டும்தான் கேப்டன். நாங்கள் ஒருமாதத்துக்கு முன்பே போட்டிக்குத் தயாராகத் தொடங்கிவிட்டோம். ஹர்திக் பாண்டியா ஆட்டம் சிறப்பாக இல்லை. அவர் ஃபார்ம் அவுட்டில் உள்ளார். மற்ற அனைவரும் வழக்கமான வீரர்கள்தான்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்றிருந்தார். அதில், அவர் சிறப்பாகவும் விளையாடியிருந்தார். அவரால் உடனடியாக டி20 வடி ஆட்டத்துக்கு மாற்ற முயன்றால் எளிதாக விக்கெட் ஆகிவிடுவார். எனவே, சற்று ஓய்வு பெறுவதற்காக முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: