14-வது ஐபிஎல் டி20 போட்டிக்காக டெல்லி கேபிடல்ஸ் அணி தயாராகி வரும் நிலையில், அந்த அணியின் வழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால், யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி அணியில் கேப்டன் பதவிக்கு அஸ்வின், ரிஷப் பந்த், ரஹானே ஆகியோரின் பெயர்கள் அடிபடும் நிலையில், இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியவில்லை. இதுவரை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகமும் கேப்டன் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை.
அஸ்வினுக்கு ஐபிஎல் கேப்டன்சி செய்த அனுபவம் உள்ளது, மேலும் அவர் கேப்டன்சிக்கான தயாரிப்புதான், அதனால்தான் கோலி அவரை ஒருநாள், டி20-யிலிருந்து உட்கார வைத்தார்.
கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு எழுதிய பத்தியில் அஸ்வின் மற்றவர்கள் போல் கேப்டனை ஹெட்மாஸ்டராகக் கருதி வாளாவிருக்க மாட்டார், தனது விமர்சனங்களை வைக்கக் கூடியவர் என்று எழுதியிருந்தார். விமர்சனம் என்றால் கோலி 100 அடி தூரம் ஓடக்கூடியவர். அவர் எப்படி அஸ்வினை ஊக்குவிப்பார்? அதனால் அவரது கேப்டன்சி திறமைகளுக்கு எடுத்துகாட்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார், பிரமாதமாக கேப்டன்சி செய்தார்.
அஸ்வின் கேப்டனாக, வீரராக அனைவருக்கும் சவால் அளிப்பவர். அனுபவமும் உள்ளது.
கேப்டன்சிக்குப் பரிசீலிக்கப்படும் இன்னொரு நபர் ஸ்டீவ் ஸ்மித். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த சீசன் கேப்டன்சி செய்தார். ஆனால் இப்போது ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரிக்கி பாண்டிங் இவரைப் பிடித்துப் போட்டுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் பற்றி கேட்கவே வேண்டாம், கேப்டன்சி நுணுக்கமும் ஆக்ரோஷமும் அருமையான களவியூகம், சாதுரியம் பந்து வீச்சு மாற்றம், இருக்கும் ஆதாரங்களைப்பயன்படுத்தும் திறன் மற்றும் அனுபவம் உள்ள வீரர், ஆனால் சிக்கல் என்னவெனில் கம்யூனிகேஷன், இந்திய வீரர்களுடன் அவர் தொடர்புகொள்வது அந்த சரளத்துடன் தொடர்பு கொள்வது கடினம். ரோகித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் 59.2% ஐபிஎல் வெற்றிகளுடன் உண்மையில் தகுதியான நிலையில் இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.
இன்னொரு கேப்டன்சி உருப்படி அஜிங்கிய ரகானே ஆவார். இவர் ஆஸ்திரேலியா போய் வெற்றி பெற்றுத் திரும்பிய ஒரு போர் வீரன். ஆனால் பேட்டிங் பார்ம் சந்தேகமாக உள்ளதால் இவருக்கு வாய்ப்பு கடினம்.
இன்னொரு வீரர் ரிஷப் பந்த் என்கிறார்கள். ஆனால் ரிஷப் பந்த் ஒரு ஃப்ரீக் அவருக்கு கேப்டன்சி கொடுத்தால் அவரது ஆட்டம் போய்விடும். ஆனால் விஜய் ஹசாரே டிராபியில் மும்பைக்கு கேப்டன்சி செய்த பிரிதிவி ஷா இன்னொரு கேப்டன்சி உருப்படியாவார்.
ஆகவே அஸ்வின், ஸ்மித், ரகானே, பிரிதிவி ஷா இடையே டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன்சி போட்டி உள்ளது. ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, IPL 2021, Prithvi Shaw, R Ashwin, Rishabh pant, Steve Smith