• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • என் முதல் காதலே.. தோனியே... ஐ லவ் யூ மாஹி: சாக்‌ஷி முன்னிலையில் தோனி மீதான காதலை தெரிவித்த ரசிகை

என் முதல் காதலே.. தோனியே... ஐ லவ் யூ மாஹி: சாக்‌ஷி முன்னிலையில் தோனி மீதான காதலை தெரிவித்த ரசிகை

தோனி மீதான காதலை வெளிப்படுத்திய ரசிகை. -2018

தோனி மீதான காதலை வெளிப்படுத்திய ரசிகை. -2018

2018 ஐபிஎல் தொடரின் போது தல தோனி மீதான தன் காதலை பட்டவர்த்தனமாக அதுவும் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி முன்னிலையில் தோனி மீதான தன் காதலை ஒரு பெண் வெளிப்படுத்தினார். தன் காதலைத் தெரிவிக்கும் வாசகம் அடங்கிய பேனரைத் தூக்கிப் பிடித்தார்.

  • Share this:
    2018 ஐபிஎல் தொடரின் போது தல தோனி மீதான தன் காதலை பட்டவர்த்தனமாக அதுவும் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி முன்னிலையில் தோனி மீதான தன் காதலை ஒரு பெண் வெளிப்படுத்தினார். தன் காதலைத் தெரிவிக்கும் வாசகம் அடங்கிய பேனரைத் தூக்கிப் பிடித்தார்.

    சிஎஸ்கே அணிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு, காரணம் தோனியின் அந்த அமைதியும் விவேகமும், வெற்றியையும் தோல்வியையும் ஒரே விதமாக அணுகும் நடுநிலைமை, மைதானத்திலும் சரி வெளியிலும் சரி தன்னை நடத்திக் கொள்வதில் ஒரு ஜெண்டில் மேனாகவும் களத்தில் கூலாகவும் அதே வேளையில் பேட்டிங்கில் அனைவரையும் கவரும் ஆட்டத்தையும் ஆடிவருபவர் தோனி.

    அதுவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின் இந்திய சீருடையில் அவரை இனி பார்க்க முடியாத ஏக்கத்தை சிஎஸ்கே சீருடையில் நீண்ட காலம் பார்க்க வேண்டும் என்று விரும்பும் தோனி வெறியர்கள்... சாரி.. ‘தல’ வெறியர்கள் கொண்டதுதான் தமிழ் கிரிக்கெட் ரசிக உலகம். இந்தப் பின்னணியில்தான் 2018-ல் ஐபிஎல் போட்டி ஒன்றின் போது, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் தோனி மீதான தன் காதலை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார். அதுவும் தோனி மனைவி சாக்‌ஷி தோனி முன்னிலையில்.

    அந்த ரசிகை ‘தோனி மீதுதான் என் முதல் காதல்’ என்று பேனரைக் காட்டினார். ஐசிசி அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தன் சமூக ஊடகத்தில் வெளியிட்டது. அந்தப் பெண் காட்டிய அந்த பேனரில், “மன்னிக்கவும் எதிர்கால துணைவரே! தோனிதான் எப்போதும் என் முதல் காதலர், ஐ லவ் யூ மாஹி என்று எழுதியிருந்தது.



    ஒரு ரசிகை இப்படி என்றால், இன்னொரு ரசிகை தோனிக்கு பிரியாவிடை போட்டி இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் அதற்கு தோனி கடைசி போட்டி சென்னையில்தான் ஆடுவேன் என்று உறுதி அளித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இன்னும் ஒரு சீசன் மஞ்சல் ஆர்மியை வழிநடத்துவதையும் அவர் தெரிவித்தார். எனவே சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி ஆட்டத்தை கண்டு களிக்கக் காத்திருக்கின்றனர் தல ரசிகர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: