சிக்ஸ் அடிக்கிறேனு மைதானத்தில் ஃபிரிட்ஜை உடைத்த ஜானி பேர்ஸ்டோ - வைரல் வீடியோ!

சிக்ஸ் அடிக்கிறேனு மைதானத்தில் ஃபிரிட்ஜை உடைத்த ஜானி பேர்ஸ்டோ - வைரல் வீடியோ!

ஜானி பேர்ஸ்டோ

சேஸிங்கின் போது ட்ரெண்ட் போல்ட் வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் பிரமாதமான 2 சிக்ஸர்களை பேர்ஸ்டோ தூக்கினார்

  • Share this:
ஜானி பேர்ஸ்டோ அடித்த சிக்ஸர் மூலம் மைதானத்தில் டக் அவுட் பகுதியில் இருந்த ஃபிரிட்ஜின் கண்ணாடி நொறுங்கியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் குறைந்த இலக்கை நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ் அணி கட்டுக்கோப்பான ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சின் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவிய போதிலும் கூட அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் இணை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குடைச்சலை கொடுத்தது. முதல் இரண்டு ஓவர்கள் அடக்கி வாசித்த இவர்கள் இருவரும், 7.2 ஓவர்கள் வரை களத்தில் இருந்த நிலையில் 67 ரன்கள் குவித்து மும்பை அணியின் பந்து வீச்சை நொறுக்கி எடுத்தனர்.

இதில் பல முறை ஜானி பேர்ஸ்டோ பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். சேஸிங்கின் போது ட்ரெண்ட் போல்ட் வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் பிரமாதமான 2 சிக்ஸர்களை பேர்ஸ்டோ தூக்கினார். அதில் ஒன்று டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பருக்கு மேல் பறந்தது. ஆனால் இரண்டாவது சிக்ஸர் லாங் ஆனுக்கு தூக்கி அடித்தார் பேர்ஸ்டோ. அவர் சிக்ஸர் அடித்த பகுதியானது சன்ரைசர்ஸ் அணியினரின் டக் அவுட் பகுதியாகும் . பேர்ஸ்டோ தூக்கிய சிக்ஸானது அங்கிருந்த ஃபிரிட்ஜ் ஒன்றை பதம் பார்த்தது. இதில் ஃபிரிட்ஜின் கண்ணாடி நொறுங்கியது.

 



இதற்கிடையே பேட்டிங்கில் சோபிக்கத் தவறிய மும்பை அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா துல்லியமான த்ரோ மூலம் ஸ்டம்பை தாக்கி இரண்டு விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். முதலில் அமர்க்களமாக ஆடிக்கொண்டிருந்த டேவிட் வார்னரையும், பின்னர் விஜய் சங்கருக்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமதின் விக்கெட்டையும் ரன் அவுட் ஆக்க உதவினார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றிக் கனவு தவிடு பொடியானது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: