விதை சி.எஸ்.கே போட்டது... சிக்ஸர்கள் இல்லாத இன்னிங்ஸை முடித்த டெல்லி கேப்பிடல்ஸ்

விதை சி.எஸ்.கே போட்டது... சிக்ஸர்கள் இல்லாத இன்னிங்ஸை முடித்த டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சரவெடியாக வெடித்த துவக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ப்ரித்வி ஷா நேற்று ஏமாற்றம் அளித்தனர்.

 • Share this:
  அதிரடிக்கு பஞ்சமில்லாத ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அதுவும்  மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் ஒரு சிக்ஸர்கள் கூட அடிக்கப்படவில்லை என்பது ஆச்சர்யமளிக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டும் ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. அதேபோல் எந்த அணிக்கும் ஹோம்க்ரவுண்டில் ஆடும் வாய்ப்பு இல்லை என்பதால் இந்தத்தொடர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

  மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியில் சி.எஸ்.கே - டெல்லி கேப்பிடஸ் மோதின போட்டியில் சென்னை , டெல்லி அணி வீரர்கள் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். டெல்லி அணிக்கு தவான், ப்ரித்வி ஷா அற்புதமான ஃபார்ட்னர் ஷிப் அமைத்து அந்தப்போட்டியை வெற்றியை நோக்கி அழைத்து செய்தனர். இதனால் டெல்லி ரசிகர்கள் நேற்றைய போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

  இந்தப்போட்டியில் முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சரவெடியாக வெடித்த துவக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ப்ரித்வி ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் அரைசதம் அடித்ததால் இந்த ஸ்கோர் வந்தது.

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெயதேவ் உனட்கட் அற்புதமாக பந்துவீசி டெல்லியை கட்டுப்படுத்தினார். சீரான் இடைவெளியில் ராஜஸ்தான் அணி விக்கெட்டுகளை வீழ்த்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் டெல்லி அணி சிக்ஸர்களே இல்லாமல் இந்த இன்னிங்ஸை முடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் சிக்ஸர் அடிக்காமல் ஒரு அணி இன்னிங்ஸ் முடிப்பது இதுவே முதல்முறை.

  ஐபிஎல் கிரிக்கெட் ஒரு அணி சிக்ஸர் அடிக்காமல் இன்னிங்ஸ் முடிப்பது முதல்முறையல்ல ஈடன் கார்டன் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஜெய்ப்பூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிக்ஸர்கள் அடிக்காமல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளனர். 2013-ம் ஆண்டு இதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 16 பவுண்டரிகள் அடித்த நிலையில் ஒரு சிக்ஸரை கூட சிஎஸ்கே பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Ramprasath H
  First published: