• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உலகக்கோப்பையை வாங்க மாட்டேன் என்று தர்ணா செய்தார் மோர்கன்: அஸ்வின் விவகாரத்தில் சேவாக் செம கிண்டல்

உலகக்கோப்பையை வாங்க மாட்டேன் என்று தர்ணா செய்தார் மோர்கன்: அஸ்வின் விவகாரத்தில் சேவாக் செம கிண்டல்

சேவாக்.

சேவாக்.

ரிஷப் பந்த் உடலில் பட்டுச் சென்ற பந்துக்கு கூடுதல் ரன் ஓடிய விவகாரத்தில் அஸ்வின், மோர்கன் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட விவகாரம் மெல்ல மெல்ல சூடுபிடித்து வருகிறது, அஸ்வினுக்கு ஆதரவாக மோர்கனின் இங்கிலாந்து உலகக்கோப்பை வெற்றியை செம கிண்டல் செய்து பதிவு போட்டுள்ளார்.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    டெல்லி கேபிடல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மோர்கன், அஸ்வின், டிம் சவுதி இடையிலான வார்த்தை மோதல்தான் பெரும் சர்்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப்பந்த் எதிர் கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப்பந்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார்.

    பொதுவாக இதற்கு ரன் ஓட மாட்டார்கள் அது மரபு. விதிமுறைப்படி பேட்ஸ்மென் மேல்தான் தவறு பந்து பட்டால் அவுட் ஆகும் வாய்ப்பை தடுக்கிறார் என்று இருக்க, இவர்கள் கூடுதல் ரன் ஓடினால் எரிச்சல் வரத்தானே செய்யும், ஆனால் மோர்கன் இதற்குக் கோபப்பட உரிமையற்றவர் என்பதுதான் சரி. ஏனெனில் 2019 உலகக்கோப்பை இறுதியில் பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பந்து பவுண்டரிக்குச் சென்றது அந்த 6 ரன்களினால்தான் ஆட்டம் டை ஆனது, இல்லையெனில் நியூசிலாந்து உலகக்கோப்பையை வென்றிருக்கும். இது நியூசிலாந்து அணியை நிலைகுலையச் செய்தது.

    இந்நிலையில் சேவாக், அஸ்வினுக்கு ஆதரவாகக் கூறும்போது, “ஜூலை 14, 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பந்து பவுண்டரிக்குச் சென்ற போது மிஸ்டர் மோர்கன் லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே தர்ணா செய்து இந்த உலகக்கோப்பையை வாங்க மாட்டேன் என்றார், நியூசிலாந்து கோப்பையை வென்றது இல்லையா மோர்கன்...?” என்று செமத்தியாகக் கிண்டல் செய்துள்ளார்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டிரன்ட் போல்ட் வீசிய ஓவரில் மார்டின் கப்தில் பந்தை பீல்டிங் செய்து ரன் அவுட் செய்ய எறிந்தார் அப்ோபது பந்து பென் ஸ்டோக்ஸ் பேட் மீது பட்டு பவுண்டரிக்குச் சென்றுவிடும். இதைப் பார்த்த நடுவர் தர்மசேனா, 6 ரன்களை வழங்குவார். இந்த 6 ரன்களால்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு ஆட்டம் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    Also Read: அஸ்வின் செயல் கிரிக்கெட்டுக்கே இழுக்கானது... அவமானம்: ஷேன் வார்ன் பாய்ச்சல்

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: