• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கே.எல்.ராகுலுக்குப் பேட்டிங் பாடம் எடுத்த சேவாக்

கே.எல்.ராகுலுக்குப் பேட்டிங் பாடம் எடுத்த சேவாக்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

சேவாக் சொல்வது ராகுலுக்குத் தெரியாதா என்ன? ஆட்டத்தில் முன் கூட்டியே யார் வெற்றி பெற வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் போட்டிகளில் கேப்டனாக ராகுல்தான் என்ன செய்ய முடியும்?

  • Share this:
    பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2021 தொடரில் சீரான முறையில் ஆடுவதில்லை அணித்தேர்வு உட்பட பல தவறுகள் செய்யப்படுகின்றன, பேட்டிங் உத்தியிலும் எதை அடிக்க வேண்டும் எதை அடிக்கக் கூடாது என்பதில் தடுமாற்றங்கள் இருந்து வருகின்றன.

    மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக ஏகப்பட்ட உஷ் கண்டுக்காதீங்க தருணத்தில் ஒன்றுதான் பவர் ப்ளேயில் குருணால் பாண்டியாவை அடித்து நொறுக்காமல், அதற்கான முயற்சியையும் செய்யாமல் சொதப்பினார்கள் கே.எல்.ராகுலும் இப்படித்தான் ஆடினார். தொடக்கத்தில் கெய்லை இறக்கியிருந்தால் குருணால் பாண்டியா பவுலிங் செய்திருக்க மாட்டார், எங்கிருந்தோ மந்தீப் சிங்கை களமிறக்கி சொதப்பினார்கள் பஞ்சாப்.

    கே.எல்.ராகுல் 22 பந்து 21 ரன் என்றும் மந்தீப் சிங் 15 ரன்னில் ஆட்டமிழக்க கிறிஸ் கெய்லை 1 ரன்னில் பொலார்டு வெளியேற்றினார். அய்டன் மார்க்ரம் 42, தீபக் ஹூடா 28 ரன்கள் எடுக்க கடைசி 4 ஒவர்களில் பவுண்டரியே வரவில்லை இதனையடுத்து 135/6 என்று முடிந்தது பஞ்சாப், விரட்டலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் திவாரி 45, பாண்டியா 40 வெற்றி பெறச் செய்தனர் என்பதை விட ஷமி தன் மோசமான ஓவரினால் மும்பையை வெற்றி பெறச் செய்தார்.

    இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் ஆட்டம் பற்றி சேவாக் விமர்சிக்கும் போது, பேட்டிங் பாடம் எடுத்தார், “ரோகித் சர்மா போன்ற வீரர்கள் பந்துக்கு என்ன ஸ்ட்ரோக்கோ அதை ஆடுபவர், கே.எல்.ராகுல் ரக வீரர்கள் இறங்கும் முன்பே முடிவு செய்கின்றனர், இன்று டிபன்ஸ் ஆடப்போகிறோம், இன்று அட்டாக் செய்யப்போகிறோம் என்று, இது சரிப்பட்டு வராது.

    ராகுல் தன் இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும், முன் தீர்மானம் அவருக்கு சரிப்பட்டு வராது, அவர் இயல்பான ஆட்டத்தை ஆடும்போது அவரிடம் அத்தனை ஸ்ட்ரோக்குகளும் வெளிப்படுகிறது. வேகப்பந்து, ஸ்பின் இரண்டிலுமே அவர் கைதேர்ந்த ஷாட்களைக் கொண்டுள்ளார். எனவே அவர் முன் தீர்மானத்துடன் இறங்கி ஆடக்கூடாது” என்றார் சேவாக்.

    சேவாக் சொல்வது ராகுலுக்குத் தெரியாதா என்ன? ஆட்டத்தில் முன் கூட்டியே யார் வெற்றி பெற வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் போட்டிகளில் கேப்டனாக ராகுல்தான் என்ன செய்ய முடியும்?

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: