• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Kohli| சில அம்பயர்கள் இனி நிம்மதியாக தூங்கலாம்: கேப்டனாக கோலி குறித்து ஏ.பி.டிவிலியர்ஸ்

Kohli| சில அம்பயர்கள் இனி நிம்மதியாக தூங்கலாம்: கேப்டனாக கோலி குறித்து ஏ.பி.டிவிலியர்ஸ்

விராட் கோலி.

விராட் கோலி.

கேப்டனாக ஆர்சிபி அணிக்காக கோப்பையை வெல்லும் பாக்கியம் விராட் கோலிக்குக் கிடைக்காமலேயே கேப்டன்சியிலிருந்து விலகியுள்ளார் விராட் கோலி, இதனையடுத்து கோலிக்கு கவாஸ்கர் ஆறுதலையும், சக வீரர் ஏ.பி.டிவிலியர்ஸ் பாராட்டையும் நல்கியுள்ளனர்.

  • Share this:
    ஐபிஎல் அரங்கில் அணி மாறாத ஒரே வீரர் விராட் கோலிதான், தனக்கு விசுவாசம் மிக முக்கியம் எனும் கோலி கடைசி வரை ஆர்சிபிக்குத்தான் வீரராக ஆடுவேன் என்று உறுதியளித்துள்ளார். 2018-ல் இவரை ரூ.17 கோடிக்கு ஆர்சிபி தக்கவைத்தது, இவர்தான் ஐபிஎல் அரங்கில் மிகவும் விலைகொடுக்கப்பட்ட ஒரு வீரர். 140 ஐபிஎல் போட்டிகளில் 4,881 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார், அடுத்த இடத்தில் கேப்டன் தோஇ 4456 ரன்களுடன் உள்ளார்.

    தன் கேப்டன்சியில் இளம் வீரர்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமாக இருந்ததாக கோலி குறிப்பிட்டார். இதைத்தான் இந்திய அணியிலும் செயல்படுத்தியதாக கோலி அன்று ஆட்டம் முடிந்தவுடன் உருக்கமாகத் தெரிவித்தார். இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கோலியின் பயணம் குறித்து கூறுகையில், “ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கோலி பெற்றுத்தந்துள்ளார். ஒவ்வொருவருமே தங்கள் பயணத்தை சிறப்பாக முடிக்க விரும்புவார்கள் ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை.

    டான் பிராட்மேன் தன் கடைசி போட்டியில் 4 ரன்கள் எடுத்திருந்தால் டெஸ்ட் அரங்கில் யாரும் நெருங்க முடியாத 100 ரன்கள் என்ற சராசரியில் முடிந்திருப்பார், ஆனால் கடைசி போட்டியில் டக் அவுட் ஆனார். இதனால் சராசரி 99.94 ஆக முடிந்தது. சச்சின் டெண்டுல்கர் தன் 200வது டெஸ்ட் போட்டியில் விண்டீஸுக்கு எதிராக சதம் எடுக்க விரும்பினார் ஆனால் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதே போல் கோலிக்கு கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் திறமைக்குக் குறைவில்லை. 2016 தொடரில் ஆயிரம் ரன்களுக்கு 27 ரன்கள் குறைவாக 973 ரன்களை குவித்தார், இதுவரை இதையாரும் நெருங்க முடியவில்லையே? என்றார் சுனில் கவாஸ்கர்.

    Also Read: டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு ஆலோசகராக உள்ள தோனிக்கு சம்பளம் எவ்வளவு?- பிசிசிஐ பொதுச்செயலாளர் பதில்

    ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறும்போது, “அணியைச் சிறப்பாக வழிநடத்தினார் கோலி. சிறந்த வீரராகவும் மனிதராகவும் உருவெடுக்க் எனக்கு உதவினார். அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். வீரர்கள் மத்தியில் தன்னம்பிக்கை விதையை விதைத்தார். இது கோப்பையை விடவும் பெரியது. அணியின் நலனுக்காக அவர் பாடுபட்டதை மறக்க மாட்டோம். சில அம்பயர்கள் இனி நிம்மதியாகத் தூங்கலாம். இனிமையான நினைவுகளைத் தந்ததற்கு நன்றி” என்றார் ஏ.பி.டிவிலியர்ஸ்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: