• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 playoff: 2 அணி, 2 போட்டி, பிளே ஆஃபில் ஒரே இடம்- மும்பையா கொல்கத்தாவா?

IPL 2021 playoff: 2 அணி, 2 போட்டி, பிளே ஆஃபில் ஒரே இடம்- மும்பையா கொல்கத்தாவா?

கொல்கத்தா-மும்பை யார் தகுதி பெறுவது?

கொல்கத்தா-மும்பை யார் தகுதி பெறுவது?

ஐபிஎல் 2021 தொடரின் இறுதிக்கட்டம், உச்சக்கட்டம் நெருங்கி விட்டது. இன்னும் குரூப் ஸ்டேஜில் 4 போட்டிகள் உள்ளன. இதில் பஞ்சாப்-சிஎஸ்கே அணிகள் ஒரு போட்டியிலும் அதே நேரத்திலேயே கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளும் மோதுகின்றன.

  • Share this:
    நாளை 8ம் தேதி மிக முக்கியமான போட்டியான சன் ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் போட்டியும், அதே நேரத்திலேயே ஆர்சிபி. டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் மோதுகின்றன. 10ம் தேதி பிளே ஆஃப் முதல் குவாலிஃபையர் தொடங்குகிறது, டெல்லி, சிஎஸ்கே, பெங்களூரு அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்று விட்டன. 4ம் இடத்துக்கான மோதலில்தான் கொல்கத்தா, மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    கொல்கத்தாவும் 12 புள்ளிகளில் உள்ளது, மும்பையும் 12 புள்ளிகளில் உள்ளது, வித்தியாசம் என்னவெனில் மும்பை இந்தியன்ஸ் நிகர ரன் விகிதம் -0.048, கொல்கத்தா ரன் விகிதம் +0.294. கொல்கத்தா 4ம் இடம் மும்பை 5ம் இடம். அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் விகிதமும் உயர வேண்டும், அதே வேளையில் தகுதிக்கு அருகிலும் செல்ல வேண்டும் என்ற ரீதியில் மோசமாக ஆடி ஐபிஎல் ரசிகர்களையும் பார்ப்பவர்களையும் ஏமாற்றியது.

    இந்நிலையில் கொல்கத்தா தகுதி பெற வேண்டுமெனில் ஒன்றுமேயில்லை ராஜஸ்தான் ராயல்ஸ்டை வீழ்த்தி நேராக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டியதுதான். 14 புள்ளிகளில் நல்ல ரன் விகிதத்தில் தகுதி பெற்று விடுவார்கள், மும்பை சன் ரைசர்ஸை வீழ்த்தினாலும் 14 புள்ளிகள் பெற்றாலும் ரன் விகிதம் மும்பையை வெளியேற்றி விடும். மாறாக கொல்கத்தா தோற்று விட்டால் மும்பை இந்தியன்சின் கடைசி வெற்றி அதை எளிதில் பிளே ஆஃபுக்குக் கொண்டு செல்லும்.

    கொல்கத்தா-ராஜஸ்தான் போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது, பிட்ச் இங்கு வேலையைக் காட்டி விடும். இதே ஷார்ஜாவில் கொல்கத்தா ஆடிய ஒரே போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய ஒரேயொரு சாதகம் கொல்கத்தாவுக்கு உள்ளது. சரி கொல்கத்தாவும் தோல்வி அடைந்து மும்பையும் சன் ரைசர்ஸிடம் தோல்வி அடைந்தால் கொல்கத்தா அணி பெட்டர் ரன் ரேட்டில் தகுதி பெறும் மும்பை வீட்டுக்குப் போக வேண்டியதுதான். இரு அணிகளும் வென்றாலும் கேகேஆர் பெட்டர் ரன் ரேட்டில் தகுதி பெற வாய்ப்புள்ளது.

    மாறாக கொல்கத்தா தோற்று மும்பை வென்றால் மும்பைக்கு தகுதி பெற வாய்ப்பிருக்கிறது. மும்பை தோற்று கொல்கத்தா வென்றால் மும்பை கதை முடிந்தது மீண்டும் அடுத்த ஐபிஎல் தொடர்தான். சரி பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இருஅணிகளும் தங்கள் கடைசிப் போட்டியில் வென்று விடுகிறார்கள் என்றால் மும்பை, கொல்கத்தா தோல்வி அடைகிறது என்றால் கொல்கத்தாதான் தகுதி பெறும். எப்படியெனில் பெட்டர் ரன் ரேட். ஆக இந்தச் சூழ்நிலையில்தான் இன்றும் நாளையும் உள்ள 4 போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: