• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs KKR | கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு... இரு அணிகளின் Playing XI

CSK vs KKR | கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு... இரு அணிகளின் Playing XI

IPL 2021

IPL 2021

IPL 2021 | CSK vs KKR | சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியும் 2 முறை சாம்பியன் பட்டம் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோகர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ப்ளே ஆப் சுற்றில் கடந்த இரண்டு போட்டியிலும் சேஸிங் செய்த கொல்கத்தா வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இரு அணிகளில் எந்த மாற்றமின்றி கடைசி போட்டியில் விளையாடிய வீரர்களே களமிறங்குகிறார்கள்.

    சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சிஎஸ்கே 17 முறையும் கொல்கத்தா அணி 9 முறை மட்டுமே வென்றுள்ளது. இறுதி போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதி உள்ளன. இதில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் சென்னை 4 முறையும் கொல்கத்தா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் 2 முறை மோதியதில் சிஎஸ்கே அணியே வெற்றி பெற்றுள்ளது.

    கொல்கத்தா அணி : சுப்மன் கில், வெங்டேஷ் ஐயர், நிதிஷ் ரானா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், இயான் மார்கன், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், பெர்குசன், ஷிவம் மவி, வருண் சக்கரவர்த்தி

    சென்னை அணி : ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெசிஸ், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், டுவைன் பிராவோ, தீபக் சஹர், ஜோஷ் ஹசில்வுட்

     







    Chennai Super Kings

    • Faf du Plessis

    • Ruturaj Gaikwad

    • Moeen Ali

    • Ambati Rayudu

    • Robin Uthappa

    • MS Dhoni (C) (W)

    • Ravindra Jadeja

    • Dwayne Bravo

    • Shardul Thakur

    • Deepak Chahar

    • Josh Hazlewood


     
    Kolkata Knight Riders

    • Shubman Gill

    • Venkatesh Iyer

    • Rahul Tripathi

    • Nitish Rana

    • Eoin Morgan (C)

    • Dinesh Karthik (W)

    • Shakib Al Hasan

    • Sunil Narine

    • Lockie Ferguson

    • Varun Chakaravarthy

    • Shivam Mavi


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: