ஐபிஎல் 2021 : ராஜஸ்தான் - டெல்லி இன்று பலப்பரீட்சை.. இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன?

IPL 2021

ஐபில் 2021 தொடரின் இன்றயைப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

  • Share this:
    இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி – சஞ்சு சாம்ஷன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் களைகட்டவுள்ளது.

    டெல்லி அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் சென்னையை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா மற்றும் தவன் ஆகியோர் அசுர பலத்தில் உள்ளனர். இருவரும் முதல் போட்டியிலேயே அரைசதம் கண்டு சிறந்த ஃபார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் களமிறங்கும் ரிஷப் பந்த், ஸ்டாய்னிஸ், ஹெட்மயர், ரஹானே ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் எகிர வாய்ப்புள்ளது.

    வேகபந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் நம்பிக்கை அளிக்கின்றனர். ஸ்டாய்னிஸ், மற்றும் டாம் கரண் ஆகியோர் கைகொடுக்கும் பட்சத்தில் அணிக்கு கூடுதல் பலமே. சுழலில் அஸ்வின் மற்றும் மிஸ்ரா எழுச்சி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    ராஜஸ்தான் அணியை பொருத்தவரை பென் ஸ்டோக்ஸ் விலகியது அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆர்ச்சரும் இல்லாதது அணியை மேலும் பின்னடைவாகவே உள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். மற்ற பேட்ஸ்மேன்களான பட்லர், வோரா, பராக் ஆகியோர் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆல்ரவுடண்டர் ராகுல் திவாட்டியா இன்றைய ஆட்டத்திலும் எதிரணியை மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

    பந்துவீச்சில் சக்காரியா மற்றும் கிறிஸ் மோரிஸ் நம்பிக்கை அளித்தாலும், துபே, முஸ்தபிகூர் ரஹ்மான் கைகொடுத்தால் எதிரணியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தலாம். சுழலில் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் திவாட்டியா நல்ல ஃபார்மில் இருந்தாலும் ரன் வழங்குவதை கட்டுப்படுத்தவேண்டும்.இளம் கேப்டன்களை கொண்ட இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது

    இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 11 வெற்றிகளையும், ராஜஸ்தான் அணி 11 வெற்றிகளையும் குவித்து சமபலத்துடன் உள்ளனர்.
    Published by:Vijay R
    First published: