• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான் - முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி

மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான் - முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி

IPL 2021

IPL 2021

என்னைப் பொருத்தவரையில் இதுவரையிலான தொடர்களிலேயே இது தான் ஏமாற்றம் தந்த ஐபிஎல் தொடர் என மஞ்சரேக்கர் தெரிவித்தார்.

  • Share this:
நான் பார்த்ததிலேயே இது தான் மோசமான ஐபிஎல் தொடர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். மேலும் அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளதுடன், பல வீரர்கள் ஃபார்மில் இல்லாமல் திணறிவருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான பிளே ஆஃப் தகுதிச் சுற்று முடிந்தவுடன் ஈஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட்டின் தரம் குறித்து பேசினார்.

மஞ்சரேக்கர் கூறுகையில், “இந்த ஐபிஎல் தொடரில் 59 ஆட்டங்கள் பார்த்து முடித்துள்ளேன். ஆனால் வழக்கமான கிரிக்கெட்டின் பண்பு இந்த ஆட்டங்கள் எதிலும் வெளிப்படுவதை நான் பார்க்கவில்லை. இந்த சீசனில் என்னற்ற வீரர்கள் தங்களின் முந்தைய திறனை கூட வெளிப்படுத்த முடியாமல் ஃபார்ம் இன்றி தவித்ததால், இத்தொடரின் பல போட்டிகளில் சம்பந்தமில்லாத முடிவுகளும், ஏற்ற இறக்கங்களும் ஏற்பட்டன.

இத்தொடரில் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களுக்கும், சாதாரண ஆட்டத்தை கூட வெளிப்படுத்தாத வீரர்களுக்கும் பெரும் வித்தியாசத்தை பார்க்க முடிந்தது.

Also Read:  காங்கிரஸ் தலைவர்களின் சீக்ரெட் பேச்சு.. அம்பலமான கமிஷன் பிசினஸ்.. சிக்கலில் டி.கே.சிவக்குமார்!

நான் ஐபிஎல் ஆட்டங்களை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகிறேன். ஆனால் இந்த ஐபிஎல் தொடர் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. இதில் சில தரமிக்க வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை மிகச் சாதாரண ஆட்டத்தை பல வீரர்கள் வெளிப்படுத்தியதால் பல போட்டிகளின் முடிவுகளில் தடுமாற்றங்கள் ஏற்பட்டன.

என்னைப் பொருத்தவரையில் இதுவரையிலான தொடர்களிலேயே இது தான் ஏமாற்றம் தந்த ஐபிஎல் தொடர். சில போட்டிகளில் ஆரம்பத்தில் சில டீம்களிடையே லீடிங் கிடைத்தது. ஆனால் பின்னர் ஃபார்ம் இல்லாத வீரர்களினால் போட்டிகளின் முடிவு மாறின” இவ்வாறு மஞ்சரேக்கர் தெரிவித்தார்.

Also Read: இந்தியாவின் மிகவும் பழமையான புத்தகக் கடைகள்!

குவாலிஃபையர் 2வது ஆட்டம் மஞ்சரேக்கர் கூற வரும் கருத்திற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம். ஏனென்றால் கொல்கத்தா அணி ஆரம்பத்தில் வெற்றியை நோக்கி சுலபமாக பயணித்து வந்தது. கடைசி 3 ஓவர்களில் 11 ரன்கள் தேவைப்பட்டது, 7 விக்கெட்கள் கைவசம் இருந்தது. ஆனால் பின்னர் நிலைமை தலைகீழ் ஆக மாறியது. கடைசி ஓவரில் விக்கெட்கள் சரிந்தன. கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஒருவழியாக ராகுல் திரிபாதி சிக்ஸ் அடித்து தனது அணியை இறுதியாட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: