ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனையடுத்து ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்களிடையே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் கொரோனா அச்சம் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4வது வீரராக அவர் மாறியுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் ஸ்டேண்ட் பை வீரராக பிரசித் கிருஷ்ணாவை பிசிசிஐ அறிவித்தது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றிருப்பதாக பிசிசிஐ நேற்று தான் அறிவித்தது.
முன்னதாக கொல்கத்தா அணி வீரர்கள் சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி மற்றும் நியுசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை கொல்கத்தா அணியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி உறுதிப்படுத்தியுள்ளார். பிரசித் கிருஷ்ணாவின் கொரோனா பரிசோதனை பாசிட்டிவ் என அவர் கூறினார்.
மாலத்தீவுகளுக்கு பறந்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. வெளிநாட்டு வீரர்கள் எப்படி சொந்த நாடு திரும்புகின்றனர்?
சமீபத்தில் நியுசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, இந்த விவகாரம் தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் வொயிட் கூறுகையில், டிம் செய்ஃபெர்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையில் வருந்ததக்கது. எங்கள் தரப்பில் இருந்து அவருக்கு என்ன உதவி தேவைப்படுமோ அதை செய்துதருவோம். விரைவில் அவர் நெகட்டிவ் ஆகி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்.
அவரை இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு பத்திரமாக அழைத்து வருவோம் என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.