IPL 2021 | ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்

IPL 2021 | ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்

ஐபிஎல்

ஐபிஎல் 2021-ன் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தையும் மீறி, பயோ-பப்புள் பாதுகாப்பையும் மீறி  வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்குத்  கொரோனா தொற்றியதையடுத்து ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

  • Share this:
    ஐபிஎல் 2021-ன் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தையும் மீறி, பயோ-பப்புள் பாதுகாப்பையும் மீறி  வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்குத்  கொரோனா தொற்றியதையடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக பிசிசிஐ திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியன் பிரீமியர் லீக் நிர்வாகக் குழுவும் பிசிசிஐ நிர்வாகமும் அவசரகால கூட்டத்தைக் கூட்டி உடனடியாக ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்த ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பிசிசிஐ வீரர்கள், பயிற்சியாளர்கள் பிற உதவிப்பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. இது இதில் ஈடுபட்டுள்ள அனைவரது பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்த முடிவாகும்.

    ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் கூறும்போது, “ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்துகிறோம். ஐபிஎல் கிரிக்கெட் இந்த சீசன் போட்டிகளை நடத்துவதற்கான இன்னொரு சாளரம் கிடைத்தால் பிற்பாடு அது குறித்து முடிவெடுக்கப்படும்.” என்று கூறியுள்ளது.

    குறைந்தது 4 ஐபிஎல் அணிகள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளது. கடைசியாக சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற செய்திகள் எழுந்தன.

    டெல்லி கேப்பிடல்ஸ் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சிஎஸ்கே அணியிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்த அணி கடும் தனிமைப்படுத்தலுக்குச் சென்றுள்ளது, கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    டெல்லி மைதான ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா பாசிட்டிவ், ஆனால் இவர்கள் பணியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜிக்கு கொரோனா பாசிட்டிவ். முன்னதாக தன் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அஸ்வினும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து பாதியில் விலகினார்.

    இந்த கொரோனா தொற்றுக்களை கவனத்தில் கொண்டு ஐபிஎல் 2021 சீசன் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ தற்காலிகமாக நிறுத்தியுள்ளது, பிற்பாடு நடத்துவதற்கான கால நேரம், சூழ்நிலை கைகூடினால் நடத்துவது பற்றி முடிவெடுப்போம் என்று கூறுகிறது பிசிசிஐ.

     
    Published by:Muthukumar
    First published: