• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Suresh Raina| ஸ்ட்ரைக் ரேட்டும் போச்சு, ஆவரேஜும் போச்சு..‘சின்ன தல’ரெய்னா ஐபிஎல் கதை முடிகிறது?

Suresh Raina| ஸ்ட்ரைக் ரேட்டும் போச்சு, ஆவரேஜும் போச்சு..‘சின்ன தல’ரெய்னா ஐபிஎல் கதை முடிகிறது?

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மூன்று முறை கோப்பையை வென்றதிலும் ஏகப்பட்ட முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதிலும் ரசிகர்களால் சின்ன தல என்று செல்லமாக அழைக்கப்படும் ரெய்னாவின் பங்களிப்பு மகத்தானது, ஆனால் இன்று ரெய்னா சிஎஸ்கே அணியில் இடம்பெறுவதே கேள்விக்குறியானது.

  • Share this:
    ஆம்! நேற்றைய போட்டியில் ரெய்னா நீக்கப்பட்டு ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, உத்தப்பா 19 ரன்கள் எடுத்து அஸ்வினிடம் ஆட்டமிழந்தார். பிறகு தோனி இறங்கி சம்பந்தா சம்பந்தமில்லாமல் தடவி விட்டுச் சென்று விட்டார். தோனி ஏன் தன்னையே நீக்கிக் கொள்ள மாட்டேன் என்கிறார்? தோனி பேட்டிங் என்ன சிறப்பாக உள்ளதா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

    ஆனால் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் படு சொதப்பலாகி விட்டார். சிஎஸ்கே அணியின் நட்ச்த்திர வீரர் ஆல்டைம் அதிக ரன் எடுத்த சின்ன தல ரெய்னா, ஐபிஎல் 2021-ல் வான்கடேயில் டெல்லி அணிக்கு எதிராக அரைசதம் எடுத்ததோடு சரி. அதன் பிறகு இரட்டை இலக்க ஸ்கோருக்கே திணறல்தான். 12 ஆட்டங்களில் ரெய்னா 160 ரன்களை படுமோசமான சராசரியான 17.77-ல் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 125.

    இதனையடுத்து அவரை பேக் செய்வதற்காகத்தான் அணியிலிருந்து உட்கார வைக்கப்பட்டார் என்று கூறுகிறது ஒரு தரப்பு, எனவே நிச்சயம் மீண்டும் திரும்புவார் என்கின்றனர், இன்னொரு தரப்பு அவ்வளவுதான் ரெய்னா கதை முடிந்தது என்கின்றனர். கடந்த முறை துபாயில் தோனியுடன் சண்டை போட்டுக் கொண்டு இந்தியா திரும்பியதும் அவருக்கும் தோனிக்குமான விரிசல் கொஞ்சம் அதிகமாகியுள்ளது என்கின்றனர் சிலர்.

    ஆனால் மைக்கேல் வான் இது தொடர்பாக கூறும் ஒரு விஷயம் ஆச்சரியமாக உள்ளது, “மற்ற அணியாக இருந்திருந்தால் ரெய்னா கதை இந்நேரம் முடிந்திருக்கும். ஆனால் சென்னை அணியில் ஒரு வீரருக்குப் பதில் மற்றொரு வீரர் என்று உடனே மாற்ற மாட்டார்கள். அதே அணியுடன் தான் ஆடுவார்கள். ஒரு வீரருக்கு போதிய வாய்ப்பளித்து அவருக்கு ஆதரவு அளிப்பார்கள். நாம் இதை ஷேன் வாட்சன் ஆடும்போதே பார்த்தோம்.

    இதையும் படிங்க: IPL MI vs RR| மும்பை இந்தியன்சுக்கு ‘நாக்-அவுட்’ பஞ்ச் கொடுக்குமா ராஜஸ்தான்?

    பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாகவே இதனை நான் பார்க்கிறேன். ஆகவே இது சுரேஷ் ரெய்னாவின் இறுதி அல்ல, மீண்டும் அவர் வருவார் என்றே நினைக்கிறேன். ராபின் உத்தப்பாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர். சென்னையா மாற்றம் செய்தது என்பது எனக்கு ஆச்சரியமளித்தாலும் ரெய்னாவின் பார்மினால் எனக்கு நீக்கம் ஆச்சரியமளிக்கவில்லை” என்கிறார் மைக்கேல் வான்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: