SRH vs KKR | கொல்கத்தா அணி 188 ரன்கள் குவிப்பு; ஹைதராபாத்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி!

SRH vs KKR

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

  • Share this:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஐபிஎல் போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ரானா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதிஷ் ராணா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷுப்மன் கில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். இந்த நிலையில் 7வது ஓவரில் தொடக்க கோடி பிரிந்தது. ஷுப்மன் கில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷீத் கான் ஓவரில் கிளீன் போல்ட் ஆனார்.

இதன் பின்னர் நிதிஷ் ராணாவுடன் இணைந்தார் ராகுல் திரிபாதி. இவரும் தன் பங்கிற்கு சூறாவளியாக பேட்டை சுழற்றினார். நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி இணை எதிர் தரப்பு பந்து வீச்சை பதம் பார்த்தது. ராகுல் திரிபாதி 28 பந்துகளில் அரை சதம் கண்டார். இதில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதனிடையே ஆட்டத்தின் 16வது ஓவரில் தமிழக வீரர் நடராஜனின் பந்துவீச்சில் விருத்திமான் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 80 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார் ராகுல் திரிபாதி. இதன் பின்னர் வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல், இயான் மார்கன் ஆகியோர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் விக்கெட்டை இழந்தனர். டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் மிரட்டினார். 9 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 22 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார்.

இறுதியாக 20 ஓவர்களில் 6 விக்கெட்களுக்கு 187 ரன்கள் குவித்தது கொல்கத்தா அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் முகமது நபி, ரஷீத் கான் தலா இரண்டு விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.

விருத்திமான் சாஹாவும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 2வது ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். பிரசித் கிருஷ்ணா ஓவரில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சாஹா 7 ரன்களுக்கு ஷகிப் அல் ஹசன் ஓவரில் கிளீன் போல்டானார். 3 ஓவர்களுக்கு ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
Published by:Arun
First published: